சந்திரிகாவின் விசேட அறிவிப்பு
அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.
“நான் ஐக்கிய தேசியக் கட்சியிலோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியிலோ இணைந்துள்ளதாக பல்வேறு ஊடகங்கள் ஊடாக அறிவிக்கப்பட்டு வருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். நான் அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிறந்தவள் . ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் வளர்ந்தவள்.
இறுதியாக, நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே இறப்பேன்.
பல்வேறு தவறான கொள்கைகளை பின்பற்றுவதால் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் பலவீனமடைந்துள்ளது.
எனவே, பண்டாரநாயக்காவின் தத்துவத்தை நான் பாராட்டுவதுடன் தெளிவான தத்துவத்தில் பணியாற்றுகிறேன்.
நாட்டின் பொறுப்புள்ள மூத்த தலைவர் என்ற வகையில், தற்போது நம் நாடு எதிர்கொள்ளும் இரண்டு தேசிய நெருக்கடிகளுக்கு எனது ஆலோசனையை வழங்குகிறேன்: நாட்டில் குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையைப் போக்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அடிப்படைத் தீர்வுகளை வழங்குதல்.
“தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் கட்சிக் கொள்கைகளை அப்பட்டமாக காட்டிக்கொடுக்கும் போது உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்காக தூய பண்டாரநாயக்கா கொள்கைகளை பாதுகாக்க இன்றும் நாளையும் எதிர்காலத்திலும் நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதை நான் வலியுறுத்துகிறேன். என்று அவர்தெரிவித்துள்ளார்.
Post a Comment