Header Ads



இந்தியாவின் "சஹ்யாத்ரி" கொழும்பில் நங்கூரமிட்டது (படங்கள்)


இந்திய கடற்படையின் போர்க்கப்பலான 'ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி' மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (13) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.


கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.


இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே நட்புறவை வளர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.


இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த போர்க்கப்பலானது 143 மீட்டர் நீளமும், மொத்தம் 390 கப்பல்களைக் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரி கெப்டன் எம்.எம்.தோமஸ் ஆவார்.


இந்த கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படும் போது மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.


1 comment:

  1. இந்தியாவின் போர்க்கப்பல் ஏன் இலங்கைக்கு வந்தது?யார் அதனை அழைத்தார்கள்? அப்படியானால் என்ன நோக்கத்துக்காக அழைக்கப்பட்டது? எந்த அழைப்பும் இல்லாமல் வந்திருந்தால் இங்கு வருகை தந்த காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு உரியவர்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கின்றோம். இந்த நாட்டின் சதந்திரம்,பாதுகாப்பு, மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் போன்ற அடிப்படை விடயங்களை இது போன்ற விஜயங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றியும் உரிய அதிகாரிகளின் கருத்துக்களை அறிய மக்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.