Header Ads



தேசிய மீலாத் தின ஞாபகார்த்த, முத்திரையில் ஜாமிஆ நளீமியா


(ஏ.எஸ்.எம். ஜாவித்)

2022 தேசிய மீலாத் தினத்தை முன்­னிட்டு ஞாப­கார்த்த முத்­திரை ஒன்று நேற்று கொழும்பில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.


இவ்­வ­ருட தேசிய மீலாத் விழா கடந்த ஒக்­டோபர் மாதம் 09 ஆம் திகதி களுத்துறை மாவட்­டத்தில் உள்ள பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீட கேட்­போர்­ கூ­டத்தில் இடம்பெற்­றி­ருந்து.


இந்­நி­லையில், நேற்­று­முன்­தினம் இதற்­கான ஞாப­கார்த்த முத்­திரை  தபால் திணைக்­கள கேட்போர் கூடத்தில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் தலை­மையில் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக வெளி­வி­கார அமைச்சர் அலி சப்ரி கலந்­து­கொண்டார். அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், இரா­ஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மர்ஜான் பளீல் மற்றும் புத்­த­சா­சன அமைச்சின் செய­லாளர் உள்­ளிட்ட அமைச்சின் அதி­கா­ரிகள் உல­மாக்கள், கல்­வி­மான்கள் எனப் பலரும் கலந்­து­கொண்­டனர்.


தேசிய மீலாத் விழா­வின்­போது அர­சாங்கம் வெளி­யி­டப்­படும் ஞாப­கார்த்த முத்­திரையில் இம்­முறை ஜாமிஆ நளீ­மியா கலா­பீட பள்­ளி­வா­சலின் முகப்புத் தோற்றம் பொறிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.­ கலாபீட பள்ளிவாசலின் முகப்புத் தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

No comments

Powered by Blogger.