Header Ads



பகிரங்க மன்னிப்பு கோரிய பசில், ரணில் குறித்து மகிழ்ச்சி, தேர்தலுக்கும் இதுவே சிறந்த தருணம் என தெரிவிப்பு


ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில்  ராஜபக்ச தெரிவித்தார். 


இன்று -05- -இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார். 


நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்த இதுவே சிறந்த தருணம். கட்சியாக ஒரு தேர்தலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம். 


அண்மைய தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுவதற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி. அத்துடன் எதிர்பார்ப்புக்களை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தார். 


இதேவேளை, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 21ஆவது திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றம் வந்து அரசியலில் ஈடுபடும் தகைமை எனக்கு இல்லை, எனினும் நான் அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.  


சட்டப்படி நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வர முடியாது. இதனால், நான் கவலைப்படவில்லை, மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.


எமது மக்கள் எதிர்ப்பார்ப்புகளுடன் 69 லட்சம் வாக்குகளை வழங்கி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.


அவர் பதவி விலகினார். இதன் பின்னர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.


அப்போது அந்த பதவிக்கு மிகப் பொருத்தமானவரை தெரிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம். அந்த தெரிவு சரியானது என்று நான் நினைக்கின்றேன்.


நாங்கள் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரமாக அரசியலில் ஈடுபட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பது நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கொண்டிருந்த நிலைப்பாடு.


அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரமாக அரசியலில் ஈடுபட சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். ஜனாதிபதி நாங்கள் வீதியில் இறங்கி அரசியலில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.


பொருளாதார பிரச்சினை உட்பட ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பார் என்ற பெரிய நம்பிக்கை எமக்குள்ளது எனவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.   tamilw

No comments

Powered by Blogger.