ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோட்டாபயவினால், விடுவிக்கப்பட்ட தேரர் மீண்டும் கைது
இந்த கைது சம்பவம் நேற்று (08.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆயுதங்களை விகாரைக்குள் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோட்டாபய ராஜபக்சவினால் ஊவதென்ன சுமண தேரர், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு குறைந்த விலையில் தேங்காயெண்ணெய் பெற்றுத் தருவதாக வாக்களித்து பெரும் தொகைப் பணத்தை மோசடி செய்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே தேரர் பெற்றுக் கொண்ட பணத்துக்குப் பதிலாக கொடுத்த காசோலைகளும் வங்கியில் பணமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மோசடி செய்யப்பட்ட வர்த்தகரின் முறைப்பாட்டின் அடிப்படையில் ஊவதென்ன சுமண தேரர் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment