Header Ads



பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரியிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் விபரம்


மொ/பகினிகஹவெல கல்லுரியின் 98 வருட கால கல்விப்பணியில் சட்டத்துறை செல்லும் முதல் மாணவியாக துல்பிகா ஆசிரியை மற்றும்  றியால் அவர்களின் அன்புப் புதல்வியான எம்.ஆர்.நிப்லா பாடசாலையின் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்..


இம்மாணவி மொ/பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரியில் தரம் 1-13 வரை கல்வி  கற்று,  கடந்த க.பொ.த(உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறை பெற்ற மாணவியார்.அபபெறுபேற்றின் அடிப்படையில் கொழும்பு பல்கலைகழக சட்டத்துறை பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


முலம் மொ/பகினிகஹவெல மத்திய கல்லுரி மாணவன் எம்.நௌவாப்தீன் வயம்ப பல்கைல கழகத்தின் பௌதீக விஞ்ஞான பீடத்திற்கும்,எம்.ஆர்.ரிம்சாத்  கிழக்கு பல்கலைகழகத்தின் கணினி விஞ்ஞானத்துறைக்கும்,  


எம்.ஆர். ஸாதிகா சித்த வைத்திய துறைக்கும் ,எம்.எஸ்  சஹ்லா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞான பிரிவிற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


மேலும்.எம்.ஏ அஸ்மா பேராதனை பல்கலைகழக முகாமைத்துவ பீடத்திற்கும், எம்.எப் பஹ்மிலா கொழும்பு பல்கலைகழகத்தின் கலை பீடத்திற்கும்,  எம்.என் அஸ்பா பேராதனை பல்கலைகழகத்தின் கலைப்பிடத்திற்கும்,  எம்.எ.பஸ்லா கிழக்கு பல்கலைகழகத்தின் கலைப் பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.


மேலும் இம்மாணவநர்களின் பின் நின்று உழைத்த ஆசியர்கள்,நன்கொடையாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியாகும் 


மொ/பகினிகஹவெல மத்திய கல்லூரியிலிருந்த பல்கலைகழகம் செல்லும் மாணவச் செல்வங்களை அதிபர்,உட்பட ஆசியர்கள் வாழ்த்துகின்றனர்..


 தகவல் 

ஏ.எச்.எம் சிஹார் 

பகினிகஹவெல,மொனறாகலை

No comments

Powered by Blogger.