இக்கட்டான தருணத்தில் ரணில் தவிர வேறு எவரும் அறிவும், திறனும் கொண்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளமை குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தொடக்கத்தில் கடன் மறுசீரமைப்பு வெவ்வேறு நிலைகளைக் கொண்டுள்ளது. முதல் கட்டம் உத்தரவாதங்களைப் பெறுவது. உத்தரவாதங்கள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
ஆனால் கடன் மறுசீரமைப்புக்கு நேரம் எடுக்கும். இருதரப்பு கடனாளர்களிடமிருந்து உறுதிமொழிகள் வந்தால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஆரம்பக் கொடுப்பனவை நாம் முடிக்க முடியும்.
எனவே, இது கடனை மறுசீரமைப்பதற்கும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கும் சில படியாக இருக்கும்.
இன்றைய இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு எவரும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அதிக அறிவும் திறனும் கொண்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை.
எனவே, தேவையான சீர்திருத்தங்களைச் செய்வதற்கு குறைந்தபட்சம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இப்போது சிறந்த வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார்.
கட்டட மறுசீரமைப்பு, பொருளாதார மறுசீரமைப்பு என்பது நாட்டின் மிகப் பெறுமதியான நிலம், கட்டடங்கள், லங்கா டெலிகொம் போன்ற நல்ல வருமானம் தரும் கூட்டுத்தாபனங்கள், அரச நிறுவனங்களை கோடான கோடி அடிமுடிகளைப் பெற்றுக் கொண்டு வௌிநாடுகளுக்கு குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்று பின்கதவால் வௌிநாடுகளில் வைத்துள்ள வங்கிக் கணக்குக்கு கோடான கோடி டொலர்களை இலஞ்சமாகப் பெற்று அவற்றை விற்றுத் தொலைந்து நாட்டை படுபாதாளத்தில் தள்ளிவிடும் ரணிலின் திட்டத்துக்கு வௌிநாட்டு அமைச்சர் அலிசப்ரியும் வக்காளத்து வாங்கத் தொடங்கியுள்ளார். இலங்கை வரலாற்றில் கறுப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு பல நூறு ஆண்டுகளுக்கு இந்த நாட்டு மக்களின் திட்டுக்களையும் ஏச்சு, வசைகளையும் மரணத்தின் பின்னர் ஆயிரமாயிரம் வருடங்களுக்கு அவற்றின் விளைவை அனுபவிக்கத் தயாராகும் இந்தக் கூட்டத்தின் அநியாயத்தை முறையிட இந்த நாட்டு மக்களுக்கு வாய்ப்புக்களே இல்லையா?
ReplyDelete