Header Ads



அநுரகுமார விலகப் போகிறாரா..?


மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக தெரியவருகிறது.


இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்படுவார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் தேசிய மக்கள் சக்தியின் தலைவராக செயற்படுவார் என கூறப்படுகிறது.


அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, அந்த பதவியில் இருந்து விலக உள்ளதுடன் பிரதான செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நியமிக்கப்பட உள்ளார்.


இன்னும் இரண்டு ஆண்டுகளில் பின்னர் விஜித ஹேரத் பிரதான செயலாளராக நியமிக்கப்படுவார். அத்துடன் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. TW  

No comments

Powered by Blogger.