Header Ads



தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி, பெறக்கூடிய கட்சி எது..?


அவசரமான தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் கிடைக்கக்கூடிய தேர்தல் முடிவுகள் தொடர்பாக நடத்தப்பட்ட மிகவும் இரகசியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.


இதனடிப்படையில் அவசரமாக தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 51 சதவீத வாக்குகளை பெறும் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் நேருக்கு நேரான போட்டி ஏற்படும் எனவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.


இந்த கருத்து கணிப்பு முடிவுகள் கிடைத்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராம மட்ட பிரதிநிதிகளை கொழும்புக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. twin

1 comment:

  1. பல சிறுபான்மைக் கட்சிகளையும், நடுநிலைமையான சிறந்த அரசியல்வாதிகளையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு வன்மேன் சோ காட்டும் இந்த சஜித்துக்கு உள்ளே நடைபெறுவது என்ன என்பது இன்னும் புரியவில்லை. அவரை அப்படியே கட்சியில் வைத்துக் கொண்டு கட்சியை இல்லாமல் செய்து உறுப்பினர்களைத் தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும் நாடகம் சிறப்பாக அரங்கேறுகின்றது. ஒழுங்கான கட்சியோ மக்கள் ஆணையோ இல்லாத இந்த ரணில் பொருசோக் மக்கள் ஆணையுடன் மீண்டும் தெரிவுசெய்யும் நாடகம் சிறப்பாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது, அடுத்தபக்கம் தமிழ் முஸ்லிம் கட்சிகளையும் அந்தக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை பா.அ களையும் ஒன்றிணைத்து சிறப்பான நாடகத்தை அரங்கேற்ற எதிர்வரும் செவ்வாய்கிழமையை ரணில் தெரிவுசெய்திருக்கின்றார். புகையிரதம் பயணித்தபிறகும் சஜித் இதனைப் புரிந்து கொள்வார் என எம்மால் நம்பமுடியாது. வீட்டிலிருந்து சோற்றுப் பார்சலைக்கட்டிக் கொண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்துக்குச் செல்லும் இந்த சஜித் இந்த நாட்டு மக்களையும் படுகுழியில் தள்ளி மண்ணைப் போட்டு டோஸர்களால் குழியை மூடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அரகலய நகர்வுக்கு இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் ஏதும் நன்மை வரும் என எதிர்பார்த்தால் அவர்கள் இன்னும் ஒரு அரசியல் கட்சியையாவது உருப்படியாக அமைத்து தேர்தல் திணைக்கள அங்கீகாரம் பெற்றதாக அறியக் கிடைக்கவில்லை. இப்போதாயினும் அரகலய உடன் அரசியல் கட்சியை அமைத்து பணியில் உடனடியாக இறங்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.