Header Ads



மருந்து தட்டுப்பாடு, மருத்துவ சாதனங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு ஆர்ப்பாட்டம்


-ஹஸ்பர்-


வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மருத்துவ சாதனங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி இன்று (06)  மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இவ் ஆர்ப்பாட்டம் நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் இடம் பெற்றது இக்பால் நகர் மைதானத்தில் ஆரம்பித்த திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி ஊடாக சென்று மீண்டும் மைதானத்தை வந்தடைந்தது.


இவ் ஆர்ப்பாட்டத்தினை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பெண்கள் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.இவ் ஆர்ப்பாட்டத்தினை பெண்கள் அமைப்புக்களின் உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,ஆண்கள் இளைஞர்கள் உட்பட சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எமது வாழ்க்கை எமது உரிமை சுகாதார உரிமைகள் மனித உரிமைகள் பெண்களின் சுகாதார உரிமைகளை உருதிசெய் நமது வாழ்க்கை நமது உரிமை முதலான வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதேவேலை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான மஹஜர் ஒன்றையும் முன்னளிப்பு செய்தனர் "வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் சாதாரண நோய் தாக்கம் தொடக்கம் பாரிய சத்திர சிகிச்சை வரையான சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்வதே அவர்களது உரிமையாகும் குறிப்பாக மக்கள் வைத்தியசாலைகளுக்கு செல்கின்ற போது குறிப்பிட்ட அளவு அத்தியவசிய மருந்துப் பொருட்களே வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்றது ஏனைய மருந்துப் பொருட்களை தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது தனியார் மருந்தகங்களிலோ பணம் செலுத்தி பெற வேண்டிய சூழ் நிலைகளுக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் அது மாத்திரமன்றி நாய்,பூனை மற்றும் பாம்பு தீண்டுதல்களுக்கான கிடைக்கப்பெறுவது குறைவாகவே காணப்படுகின்றது " எனவும் இவற்றை நிவர்த்திக்க கோரியே குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.



No comments

Powered by Blogger.