நெருக்கடியை ஏற்படுத்தி என்ன ஒப்பந்தம் செய்தாலும், பரவாயில்லை என்ற மனநிலைக்கு மக்களை தள்ள முயற்சி
நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி மிகவும் ஆபத்தான சோபா மற்றும் எம்.சீ.சீ உடன்படிக்கைகளை கைச்சாத்திட ரணில் தலைமையிலான அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்க ஆட்சி காலத்தில் இந்த உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கு அப்போதைய அரசாங்கம் முயற்சித்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா, இலங்கையில் இராணுவ முகாமை அமைக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடியை உக்கிரமடையச் செய்து, என்ன ஒப்பந்தம் செய்தாலும் பரவாயில்லை என்ற மன நிலைக்கு மக்களை தள்ளிவிட முயற்சிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். tamilw
Post a Comment