Header Ads



கையை விரித்தார் மைத்திரிபால


2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்காமைக்கான பொறுப்பை தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தில் இன்று(05) தெரிவித்துள்ளார்.


தாம் தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இல்லாத காரணத்தினால் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கெதிராக அன்றி அரசாங்கத்திற்கு எதிராக வழக்கை தொடர்ந்து நஷ்டஈடு கோர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரதிவாதி பட்டியலிலிருந்து தம்மை நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவினால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.


இந்த தீர்ப்பிற்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.