Header Ads



இந்திய குடும்பத்திற்கு அமெரிக்காவில் ஏற்பட்ட துயரம்


அமெரிக்காவிற்கு கிறிஸ்மஸ் பண்டிகைக்காக விடுமுறையை கொண்டாட சென்ற இந்தியாவினை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.


கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறையொட்டி இந்தியா - ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா (வயது 49) தனது மனைவி மற்றும் 2 மகளுடன் சுற்றுலா சென்றுள்ளார்.


இதன்போது சுற்றுலாவிற்காக 11 பேர் சென்ற நிலையில் 3 பேர் உறைந்த ஆற்றின் மீது நடந்து சென்று புகைப்படம் எடுத்துள்ளனர்.


அமெரிக்காவில் பனியில் சிக்கி 3 இந்தியர்கள் பலி! புகைப்பட மோகத்தால் நேர்ந்த விபரீதம் | Three Indian Death In America


இதன்போது, திடீரென பனியால் உறைந்த ஆற்றில் வெடிப்பு ஏற்பட்டு 3 பேரும் உறைந்த ஆற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


இது குறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பல மணி நேரத்தின் பின்னர் உயிரிழந்தவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  

No comments

Powered by Blogger.