Header Ads



நாட்டு சொத்துக்களை விற்றேனும், டொலர் நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும்


நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தேனும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிடின் சர்வதேச சந்தையுடன் இலங்கை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது கடினமாகிவிடும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று (6) அவர் இதனை தெரிவித்தார்.


நாட்டில் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தற்போதுள்ள டொலர் நெருக்கடியை ஏதேனுமொரு சொத்தை விற்று தீர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இல்லை என்றால் சர்வதேச நாடுகளுடன் கொடுக்கல் வாங்கலை செய்யும் திறனை இலங்கை இழந்துவிடும். 


அத்துடன், அரசாங்கத்தின் அன்றாட செலவுகளை பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படும் எனவும் பந்துல குணவர்தன வலியுறுத்துகின்றார். வெளிநாட்டு கையிருப்பை 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கொண்டு செல்வதற்கு இலங்கை கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். 


நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து வரவு செலவுத் திட்ட நெருக்கடியைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இறுதியாக, இவ்வாறான சொத்துக்களை விற்பனை செய்வதில் நாம் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும். முடிந்தவரை வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.TL

1 comment:

  1. நல்லாட்சி அரசாங்கம் தோல்வியடைந்து செல்லும் போது திறைசேரியில் 8பில்லியன் டொலர்கள் இருந்தன. அவை திடீரென 2 பில்லியன்களாகக் குறைந்து எப்படி? அந்த 6பில்லியன் டொலர்களும் சென்றவழியைச் சரியாகக் கண்டுபிடித்து அதைத் திருப்பிப் பெற்றுக் கொண்டால் தற்போதைய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணமுடியும். அதை மறைத்துக் கொண்டு சில பரம்பரைச் சொத்துக்களை விற்று விற்று முன்னோர்கள் பாரம்பரியமாகப் பாதுகாத்துவந்த சொத்துக்களை விற்று இறுதியில் அவர்கள் கூலிவீட்டிலும் கூலியைக் கட்ட இயலாது நடுத்தெருவிலும்தான் வாழ்க்கை நடாத்துவார்கள். இதுதான் வரலாறு நெடுகிலும் நடைபெற்றுவந்த உண்மை, அதுதான் உண்மை. எனவே, முன்னோர்கள் அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் சென்றவற்றைப் பாதுகாத்து இன்னும் சொத்துக்களைச் சேரந்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக உள்ளதையெல்லாம் விற்றுத் திண்டுவிட்டு இளைய சந்ததியினரும் ஏன் அனைவரும் ஓட்டாண்டியாக நடுத்தெருவில் படுத்துக் கிடக்கும் பொருளாதாரத்தைத்தான் இந்த ஓட்டாண்டி அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அரகலய இளைஞர்கள் கூறுவதுபோல இந்த வீணாப் போன இருநூற்றிஇருபத்தைந்தையும் துரத்திவிட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் பொறுத்தமான அரசாங்கம் ஒன்றை அமைக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.