Header Ads



சாரா­வை தேடச் சென்ற வீ­ர­சிங்கவின் மரணம் மர்­ம­மா­கவே உள்­ளது, சஹ்ரானின் மனைவிக்கும் இந்நிலை ஏற்படலாம்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

சாரா­பு­லஸ்­தி­னியை தேடிக்­கண்­டு­பி­டிக்கச் சென்ற சமன்­வீ­ர­சிங்க என்ற அதி­கா­ரியின் மரணம் இன்­று­வரை மர்­ம­மா­கவே உள்­ளது. இவர் ஓர் முக்­கி­ய­சாட்சி. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சாட்­சி­யாக இருக்கும் ஸஹ்­ரானின் மனை­விக்குக் கூட இந்­நி­லைமை ஏற்­ப­டலாம். அதனால் ஜனா­தி­பதி ஸ்கொட்­லாந்து யார்ட் பொலி­ஸாரை விரைவில் அழைத்து வந்து தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியை இனங்­கண்டு சட்­டத்­தின்முன் நிறுத்­த­வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்­டிக்­கொண்டார்.


பாரா­ளு­மன்­றத்தில் இடம் பெற்ற நீதி­மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் நிதி ஒதுக்­கீடு தொடர்­பான இரண்டாம் வாசிப்பு மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு வேண்­டுகோள் விடுத்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது; இப்­போது உயிர்த்த ஞாயிறு தற்­கொலை தாக்-­குதல் தொடர்பில் வழக்கு விசா­ரணை நடை­பெ­று­கி­றது. வழக்கு­ வி­சா­ர­ணையில் சாட்­சி­க­ளாக சிலர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றார்கள். முத­லா­வது சாட்­சி­யாக பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரத்ன என்­பவர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கிறார். இரண்­டா­வது நிலந்த ஜய­வர்­தன இருக்­கிறார்.


நிலந்த ஜய­வர்­தன ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு குற்­ற­வாளி எனக் குறிப்­பிட்­டுள்­ளது. அவர் கணி­னியில் தர­வு­களை அழித்­துள்ளார். இந்த தாக்­குதல் தொடர்பில் அறிந்­தி­ருந்தும் அவர் அதனை வெளிப்­ப­டுத்­த­வில்லை. குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்­ட­வரை சட்­டமா அதிபர் திணைக்­களம் சாட்­சி­யா­ள­ராக மாற்­றி­யுள்­ளது. ஏன் சாட்­சி­யா­ள­ராக அவர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ளார் இதுதான் எமக்­குள்ள பிரச்­சினை.


அடுத்து சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் சில விட­யங்­களை நாம் கேட்க வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது. பேரா­சி­ரியர் ரொஹான் குண­ர­த்ன என்­பவர் ஒவ்வோர் இடங்­க­ளுக்குச் சென்று பணத்­துக்­காக ஆலோ­சனை வழங்­கு­பவர். அவர் எவ்­வாறு சாட்­சி­யா­ள­ராக பெயர் குறிப்­பி­டப்­ப­டலாம்.அவ­ருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் என்ன தொடர்பு இருக்­கி­றது. அவர் விசா­ரணை அதி­கா­ரியா? அவர் ஒரு நிபுணர் மாத்­தி­ரமே. அவர்­போன்ற நிபு­ணர்கள் நாட்டில் ஏரா­ள­மானோர் இருக்­கின்­றனர். கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக பதி­யேற்­றதும் அவரை பாது­காப்பு அமைச்சின் ஆலோ­ச­க­ராக நிய­மித்து அவரை சாட்­சி­யா­ள­ராக மாற்­றி­யி­ருக்­கிறார். அவர் சாட்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டது வேறு ஒன்­றுக்­கு­மில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக பல விட­யங்கள் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. அந்த விட­யங்­களை மறைப்­ப­தற்­கா­கவே பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரத்ன சாட்­சி­யா­ள­ராக மாற்­றப்­பட்டு இத்­தாக்­குதல் சம்­ப­வத்தை திசை­ தி­ருப்­பு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர்.


அதா­வது இது அடிப்­ப­டை­வாத செயற்­பாடு என்று உறுதி செய்ய முயற்­சிக்­கி­றார்கள். இது அடிப்­ப­டை­வாத செயற்­பாடு என்­பதை அனை­வரும் அறி­வார்கள். இத்­தாக்­குதல் ஸஹ்ரான் நடத்­தினார் என்­பதும் அனை­வரும் அறி­வார்கள். என்­றாலும் ஸஹ்ரான் இத்­தாக்­கு­தலை நடத்த அர­சியல் பின்­னணி வழங்­கிய, இத்­தாக்­கு­தலை பின்­னா­லி­ருந்து நடத்­திய, உதவி ஒத்­தா­சைகள் வழங்­கிய மற்றும் குண்­டு­ த­யா­ரிக்க தேவை­யான மூலப் பொருட்கள் வழங்­கி­ய­வர்கள் அனை­வ­ரையும் இனங்­காண வேண்டும். தொழில் நுட்ப வச­தி­களை செய்து கொடுத்த அனை­வ­ரையும் கண்டு பிடிக்க வேண்டும். இதற்­கா­கத்தான் இந்தத் தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரியை கண்­டு­பி­டிக்க வேண்டும் என்­கிறோம். தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரியை இனங்­கா­ணாது ஸஹ்­ரானின் இந்த திட்­டத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு முயற்­சிக்­கி­றார்கள்.


பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரத்­னவை இந்தச் சம்­ப­வத்தில் இணைத்துக் கொண்­டது. உயிர்த்த ஞாயி­று­ தாக்­கு­தலை திசை­தி­ருப்­பு­வ­தற்­காகும். இவ­ரை­விட சாட்­சி­யா­ளர்கள் இல்­லையா? ஏரா­ள­மானோர் இருக்­கி­றார்கள். சானி அபே­சே­கர இருக்­கிறார். ஏன் அவரை சாட்­சி­யா­ள­ராக்­க­வில்லை.


உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான அதி­க­மான தக­வல்­களைத் திரட்­டி­ய­வர்கள். சானி அபே­சே­க­ரவும் ரவிசென­வி­ரத்­னவின் குழு­வி­ன­ரு­மாகும். என்­றாலும் சட்­டமா அதிபர் திணைக்­களம் சாட்­சி­யா­ள­ர்­க­ளாக இந்தக் குழு­வி­னரை முன்­வைக்­க­வில்லை. இந்தச் செய்ற்­பாட்டின் இர­க­சியம் என்ன? சானி அபே­சே­க­ரவின் சத்­தி­யக்­க­ட­தா­சி­யைப்­பார்த்­தீர்கள் அல்­லவா? அதில் இத்­தாக்­குதல் தொடர்பில் முழு­வி­ப­ரங்­க­ளையும் தெரி­வித்­துள்­ளார்.


அவர் தெரி­வித்த தக­வல்­களை மையப்­ப­டுத்தி விசா­ர­ணை­களை மேற்­கொண்டால் இத்­தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியை இனங்­கண்டு கொள்­ளலாம். சட்­டமா அதிபர் திணைக்­களம் இவ்­வி­ப­ரங்­களை அறிந்து கொண்டே இத்­தாக்­கு­தலை வேறு­பக்­கத்­துக்கு திசை­தி­ருப்­பு­வ­தற்கு விசா­ரணை நடாத்­திய அதி­கா­ரி­களை சாட்­சி­யா­ள­ராக முன்­னி­லைப்­ப­டுத்­த­வில்லை. இதுவோர் பாரிய குற்­ற­மாகும்.


தொட­ரப்­பட்ட வழக்கில் குற்­றச்­சாட்­டுக்கள் 23000 உள்­ளன. இதில் விசா­ர­ணைகள் நிறை­வுபெ­றாத குற்­றச்­சாட்­டுகளும் உள்­ள­டங்­கி­யுள்­ளன. சாரா தொடர்­பான விசா­ர­ணைகள் நிறைவு பெற­வில்லை. விசா­ர­ணையை நிறைவு செய்ய முயற்­சித்­தார்கள். சாரா இறந்து விட்டார் என்று கூறி­னார்கள். இது தொடர்­பாக டீ.என்.ஏ பரி­சோ­தனை மூன்­றினை மேற்­கொண்­டார்கள். சாரா இறந்­து­விட்­ட­தா­கக்­கூறி விசா­ர­ணையை முடிவுக்குக் கொண்டுவர முயற்­சிக்­கி­றார்கள். என்­றாலும் சாரா தொடர்­பான விசா­ர­ணைகள் இன்னும் முடி­வு­றுத்­தப்­ப­ட­வில்லை. விசா­ர­ணைகள் நடை­பெ­று­வ­தில்லை.


ஹரீன் பெர்­ணான்டோ சொனிக் சொனிக் என்று கூறி உயிர் அச்சுறுத்தல்களை சந்தித்தார். இப்­போது ஹரீன் பெர்­ணான்டோ சொனிக்­கு­களின் பக்­கமே ஒன்­றாக இருக்­கி­றார். எமது பக்கம் இருக்­கும்­போது அவர் சொனிக் சொனிக் என்று கோஷ­மிட்டார். சொனிக் சொனிக்கின் விசா­ர­ணை­களை முடி­வுக்குக் கொண்டு வந்­தார்­களா? சபா­நா­ய­கர்கள் அவர்­களே அதையும் முடி­வுக்குக் கொண்டு வர­வில்லை.


மேலும் விசே­ட­மாக ஒன்றைக் குறிப்­பி­ட ­வேண்டும். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு தெர­ணி­கம வெளி­யேறும் (EXIT) பகு­தியில் லொறி­யொன்று நிறுத்­தப்­ப­டு­கி­றது. லொறியை சோத­னைக்கு உட்­ப­டுத்­தவே நிறுத்­தப்­பட்­டது. என்­றாலும் அந்த லொறி பின்பு விடு­விக்­கப்­பட்­டது. பொலிஸ் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் செக் பொயின்ட்டில் இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருக்கு விடுத்த உத்­த­ர­வி­னை­ய­டுத்தே அந்த லொறி விடு­விக்­கப்­பட்­டது.


லொறியை விடு­விக்­கு­மாறு உயர் அதி­கா­ரி­யொ­ருவர் உத்­த­ர­விட்டார் என்று அந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அந்த லொறியின் முன்னால் வி.ஐ.பி வாகனம் ஒன்று இருந்­தது. அந்த வாக­னத்­தி­லி­ருந்தே பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருக்கு தொடர்பு கொண்டு இந்த உத்­த­ர­வினை வழங்­கி­யுள்­ளார்கள். மேலும் ஒரு லொறி நிறுத்­தப்­ப­ட­வில்லை. அந்த லொறி சென்­று­விட்­டது. இந்த லொறி­களில் தான் ஸஹ்­ரானின் பாணந்­துறை பாது­காப்பு இல்­லத்­துக்கு வெடி­பொ­ருட்கள் கொண்டு செல்­லப்பட்­டுள்­ளது. இதுதான் உண்­மைக்­கதை. என்­றாலும் இந்த விசா­ர­ணை­களை முடி­வுக்குக் கொண்டு வந்­தார்­களா? இல்லை. இந்த விசா­ர­ணைகள் நிறுத்­தப்­பட்­டன.


விசா­ர­ணை­களை நிறுத்­தி­விட்டு ஸஹ்­ரா­னுடன் தொடர்­பி­லி­ருந்த சிலரை கைது செய்து வழக்கு தாக்கல் செய்­துள்­ளனர். இப்­போது இருக்கும் பிர­தான சாட்­சிதான் ஸஹ்­ரானின் மனை­வி­யாகும். அவரை ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு அழைத்து வந்து ஒரு சில தினங்­களே விசா­ரணை செய்­தார்கள். அவ­ரி­ட­மி­ருந்து பெற்ற சாட்­சி­யங்கள் முன் நோக்கி கொண்டு செல்­லப்­ப­ட­வில்லை. ஏனென்றால் அவ­ரிட­மி­ருந்து உண்­மை­யான தக­வல்கள் வெளி­வந்­து­விடும் என எண்­ணி­னார்கள். அதனால் அவ­ருக்கு கொவிட் 19 தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கக்­கூறி விசா­ர­ணை­களை முடி­வுக்குக் கொண்டு வந்­தார்கள். ஸஹ்­ரானின் மனை­வியை சாட்­சி­யாக ஏன் முன்­னி­லைப்­ப­டுத்­த­வில்லை. ஸஹ்­ரானின் மனை­விக்கு தாக்­குதல் தொடர்­பான பல விட­யங்கள் தெரியும். ஆணைக்­குழு முன்­னி­லையில் அவர் வழங்­கிய வாக்கு மூலத்தில் பல முக்­கி­ய­மான விட­யங்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


சபா­நா­ய­கர்­அ­வர்­களே இவ்­வா­றான நிலையில் எமக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. இப்­போது ஜனா­ப­தி­ப­தி­யா­கவும் அப்­போது பிர­த­ம­ரா­கவும் இருந்­த­வரின் காலத்­திலே இந்த தாக்­குதல் இடம் பெற்­றது. தாக்­கு­தலின் பின்பு எம்­மீது குற்றம் சுமத்­தி­னார்கள். இச்­ச­பை­யி­லுள்ள சில உறுப்­பி­னர்கள் எம்மை குற்றம் சுமத்­தினர். சிலர் எம் அரு­கில் அம­ரு­வ­தற்கும் விரும்­ப­வில்லை. முழு முஸ்லிம் சமூ­கத்­துக்கும் வீதியில் இறங்கி பய­ணிப்­ப­தற்கு இய­லாத மோச­மான நிலைமை ஏற்­பட்­டது.


எனது மக­னின் ­பா­ட­சா­லையை மாற்­றிக்­கொள்ளும் நிலைமை எனக்­கேற்­பட்­டது. தந்­தையே என்னால் பாட­சா­லைக்குச் செல்ல முடி­யாது. மாணவ நண்­பர்கள் என்னை கேலி செய்­கி­றார்கள் என்று மகன் என்­னிடம் கூறினார். அத­னா­லேயே நாம் கூறு­கிறோம்; இத்­தாக்­கு­தலின் பின்­னணி கண்­ட­றி­யப்­பட்டு உண்மை வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இதனை மூடி மறைக்க முடி­யாது.


சட்­டமா அதிபர் திணைக்­க­ளமும் இத­னுடன் தொடர்­பு­டைய சில பிரி­வி­னரும் சேர்ந்து மேற்­கொண்ட செயற்­பாடே இது. சட்­டமா அதிபர் திணைக்­களம் உண்­மை­யான சாட்­சி­யா­ளர்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தாது ரொஹான் குணரத்ன­ போன்­ற­வர்­களை சாட்­சி­யா­ளர்­க­ளாக முன்­னி­லைப்­ப­டுத்­தி­யுள்­ளது.


ஏனென்றால் ஸஹ்­ரானின் மீது இதனைச் சுமத்­தி­விட்டு விசா­ர­ணை­களை முடி­வு­றுத்­தவே சட்­டமா அதிபர் திணைக்­களம் திட்­ட­மிட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி தான் பத­விக்கு வந்­ததும் ஸ்கொட்­லாந்து பொலி­சா­ரைக்­கொண்டு வரு­வ­தா­கக்­கூ­றினார். ஜனா­தி­ப­தி­ய­வர்­களே உங்கள் மீதும் பாரிய குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. நாங்கள் எல்­லோரும் அர­சாங்­கத்தில் பாரிய சவால்­களை எதிர்­கொண்­டி­ருந்தோம்.


நாங்கள் தோல்­வி­ய­டை­வ­தற்கும் கார­ண­மாக இருந்­தது உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலே. அன்று எதிர்­கட்சி தனது தேர்தல் பிர­சா­ரத்தை உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை மைய­மாகக் கொண்டே மேற்­கொண்­டது.


இன்று நீங்கள் ஜனா­தி­ப­தி­யாக இருக்­கி­றீர்கள். உங்­க­ளுக்கு பொறுப்பு உள்­ளது. நீங்கள் தாக்­கு­தலின் உண்­மை­யான பின்­ன­ணியைக் கண்­ட­றிய வேண்டும். இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­பது உங்­க­ளுக்குத் தெரியும். நாம் அர­சாங்­கத்தில் ஒன்­றாக இருக்கும் போது சில விட­யங்­களை உங்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறோம். ஜனா­தி­ப­தி­ய­வர்­களே இந்த விட­யத்தை பின்­தள்­ளி­விட வேண்டாம். இதனை நாம் தேடிப்­பார்க்­க­வேண்டும். ஸ்கொட்­லாந்து யார்ட் பொலி­ஸாரை விரைவில் கொண்­டு­வா­ருங்கள் இல்­லையேல் முக்­கி­ய­மான சாட்­சிகள் எமக்கு கிடைக்­காமல் போகலாம்.


சாராபுலஸ்தினியை சமன் வீரசிங்க என்ற அதிகாரி தேடிச்சென்றார். இறுதியில் அவர் எப்படி இறந்தார் என்பது இன்று வரை இரகசியமாகவே உள்ளது.


இறுதியில் அவரை கொழும்புக் கொண்டு வந்து அவர் கொவிட் 19 தொற்றினால் இறந்துவிட்டார் எனக்கூறி அவரது சடலத்தை எரித்து விட்டார்கள்.


அந்த அதிகாரி இத்தாக்குதல் தொடர்பில் நிறைய விபரங்களைத் தேடியிருந்தார். இன்று இருக்கும் பிரதான சாட்சிகளை இவரைப்போல் நாம் இழந்து விடலாம். ஸஹ்ரானின் மனைவி இன்று பிரதான சாட்சி. அவருக்கே நிறைய விடயங்கள் தெரியும். சிலவேளை இவரைக் கூட நாம் இழந்து விடலாம்.


ஸஹ்­ரானின் மனைவி ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு வழங்­கிய சாட்­சி­யத்தின் அடிப்­ப­டையில் தாக்­குதல் தொடர்பில் நிறை­ய­வி­ட­யங்­களை அவர் அறிந்­துள்ளார் என்­பது எமக்கு புரி­கி­றது. ஸஹ்­ரானின் மனை­வியை சாட்­சி­யா­ளர்­களில் ஒரு­வ­ராக முன்­னி­லைப்­ப­டுத்த சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு முடி­யா­மற்­போ­யுள்­ளது. ஆனால் ரொஹான் குண­ரத்­னவை முதன்மை சாட்­சி­யா­ள­ராக்­கி­யுள்­ளது.


ஜனா­தி­ப­தி­ய­வர்­களே அர­சியல் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­காக திட்­ட­மிட்டு ஸஹ்­ரானைப் பயன்­ப­டுத்தி தாக்­கு­தலை மேற்­கொள்­வ­தற்கு முன்­னின்ற பிர­தான சூத்­தி­ர­தா­ரியை இனங்காணுங்கள். ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாரை அழைத்து வாருங்கள் என்றார்.- Vidivelli

No comments

Powered by Blogger.