Header Ads



திட்­ட­மிட்ட சூழ்ச்­சி­, சுகா­தார அமைச்சுக்கெதிராக வழக்குத் தொடர்ந்தார் பேரா­சி­ரியர் ரிஸ்வி ஷெரீப்


( எம்.எப்.எம்.பஸீர்)

சிறு­நீ­ரக மோசடி மற்றும் பணம் பறிப்பு உட்­பட முழு குற்றச்சாட்டுகளும் ஒரு திட்­ட­மிட்ட, சூழ்ச்­சி­யான ஊடக நிகழ்ச்சி நிர­லுக்கு உட்­பட்­டது என கொழும்பு – பொரளை வெஸ்டேர்ன் தனியார் வைத்­தி­ய­சாலை, சுகா­தார அமைச்சின் அதிகாரிகளுக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள மனுவில் பேரா­சி­ரியர் ரிஸ்வி ஷெரீப் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு குண்­டு­வெ­டிப்பைத் தொடர்ந்து, தனது மருத்­து­வ­மனை பல தட­வைகள் பல தவ­றான குற்­றச்­சாட்­டு­களால் குறி­வைக்­கப்­பட்­ட­தா­கவும், பின்னர் அவை போலி­யா­னவை என நிரூ­பிக்­கப்­பட்­ட­தா­கவும் மனு­தாரர் மனுவில் மேலும் சுட்­டி­க்காட்­டி­யுள்ளார்.


ஏழை எளி­ய­வர்­களை ஏமாற்றி இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் சட்ட விரோத சிறு­நீ­ரக வர்த்­தகம் தொடர்­பி­லான அனைத்து குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் மறுக்கும் நிலையில், தமது வைத்­தி­ய­சா­லையில் உறுப்பு மாற்று சத்­திர  சிகிச்­சை­களை தற்­கா­லி­க­மாக இடை நிறுத்தி சுகா­தார அமைச்சு விடுத்­துள்ள தடைக்கு எதி­ரா­கவே கொழும்பு, பொரளை, கொட்டா வீதியில் அமைந்­துள்ள வெஸ்டேர்ன் தனியார் வைத்­தி­ய­சாலை நீதி­மன்றை நாடி­யுள்­ளது.


அதன்­படி குறித்த வைத்­தி­ய­சா­லையின் தலைவர் பேரா­சி­ரியர் ரிஸ்வி ஷெரீப் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் கட்­டளை நீதிப் பேராணை ( writ of Mandamus) மனு­வொன்றை தாக்கல் செய்­துள்ளார்.


மனுவின் பிர­தி­வா­தி­யாக சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் உள்­ளிட்டோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.


இந்த மனு­வா­னது கடந்த 16 ஆம் திகதி மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­க­ளான சோபித்த ராஜ­க­ருணா மற்றும் தம்­மிக கனே­பொல ஆகியோர் அடங்­கிய அமர்வு முன்­னி­லையில் பரி­சீ­லிக்­கப்­பட்­டது.


இதன்­போது மனு­தா­ர­ருக்­காக நீல­கண்டன் மற்றும் நீல­கண்டன் சட்ட நிறு­வ­னத்தின் ஆலோ­ச­னைக்கு அமைய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மையில் சட்­டத்­த­ரணி ஷஹீதா பாரி, புலஸ்தி ரூப­சிங்க, ஹபீல் பாரிஸ், ரித்மி பென­ர­கம உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.


இதன்­போது முன் வைக்­கப்­பட்ட விட­யங்­களை ஆராய்ந்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் , தற்­போது வெஸ்டேர்ன் தனியார் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறும் இரு சிறு­நீ­ரக நோயா­ளி­களின் நலன்கள் தொடர்பில் உட­ன­டி­யாக ஆரா­யு­மாறு சுகா­தார சேவைகள் பணிப்­பா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டது.


தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில், 1985 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் இலங்­கையில் முதன்­மு­றை­யாக சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சையை மேற்­கொள்­வதில் தாம் முக்­கிய பங்­காற்­றி­ய­தா­கவும், 1000க்கும் மேற்­பட்ட சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சை­களை நோயா­ளி­க­ளுக்கு செய்­துள்­ள­தா­கவும் மனு­தா­ர­ரான பேரா­சி­ரியர் றிஸ்வி ஷெரீப் குறிப்­பிட்­டுள்ளார்.


வெஸ்டர்ன் மருத்­து­வ­ம­னையால் மேற்­கொள்­ளப்­படும் அனைத்து சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சை­களும் தெளி­வான, வெளிப்­ப­டை­யான மற்றும் நிறு­வப்­பட்ட சட்ட நடை­மு­றை­க­ளின்­படி மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்று மனு­தாரர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.


சிறு­நீ­ரக மோசடி மற்றும் பணம் பறிப்பு உட்­பட முழு சம்­ப­வமும் ஒரு திட்­ட­மிட்ட, சூழ்ச்­சி­யான ஊடக நிகழ்ச்சி நிர­லுக்கு உட்­பட்­டது என்று மனு­தாரர் அம்­ம­னுவில் குறிப்­பிட்­டுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு குண்­டு­வெ­டிப்பைத் தொடர்ந்து, தனது மருத்­து­வ­மனை பல தட­வைகள் பல தவ­றான குற்­றச்­சாட்­டு­களால் குறி­வைக்­கப்­பட்­ட­தா­கவும், பின்னர் அவை போலி­யா­னவை என நிரூ­பிக்­கப்­பட்­ட­தா­கவும் மனு­தாரர் மனுவில் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மருத்­து­வ­ம­னை­யா­னது எல்லா நேரங்­க­ளிலும் சுகா­தார அமைச்­சினால் வகுக்கப்பட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் நடைமுறைகளையும் பின்பற்றுவதாகவும், அமைச்சின் அனுமதியின் பேரில் மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் குறித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி பரிசீலிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.– Vidivelli

No comments

Powered by Blogger.