மெளலவி இட்ட முகநூல் பதிவு, களத்தில் குதித்த பொலிஸ் நிலையம்
இதன் பின்னர் அந்த மௌலவியிடம்.. இதுபோன்று இன்னும் பலர் உள்ளார்களா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரும் இன்னும் இது போன்று பல வறிய குடும்பங்கள் இருப்பதாக பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கூறியுள்ளார்..!
சரி.. இதில் நாம் முதற்கட்டமாக 50 குடும்பங்களுக்கு உதவிகள் புரிவோம், பிறகு ஏனையோருக்கும் வழங்குவோம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மௌலவியிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 17 ம் திகதி (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன் பிறகு, தொடர் முயற்சிகளை மேற்கொண்ட நிந்தவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் குறித்த பள்ளிவாசல் இமாம் ஆகியோர், இப்பிரதேசத்தில் வசிக்கும் தமிழ், முஸ்லிம் என இருமதங்களைச் சேர்ந்த 50 வறிய குடும்பங்களுக்கு, சுமார் 5,000 பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை, சுனாமி நினைவு தினமான நேற்று முன்தினம் (26) அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே. ரத்நாயக்க, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.டி.எம்.எல். புத்திக, நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் பாறூக் இப்ராஹிம், நிந்தவூர் பிரதேச பொலிஸ் ஆலோசணைக்குழுவின் உறுப்பினர்கள், உலமாக்கள் முன்னிலையில் வழங்கி கௌரவித்துள்ளனர்.
உண்மையில் இந்த நிகழ்வானது, பொதுமக்கள் மீது பொலிஸார் வைத்துள்ள மனிதாபிமான செயற்பாடுகளுக்கு இச்சம்பவம் மிகவும் எடுக்காட்டு என்பதுடன், சமூக ஊடகங்களை கற்றோர்களும், மார்க்க அறிஞர்களும் இவ்வாறான நல்ல வழிகளில் பயன்படுத்தினால், நிந்தவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி போன்று இன்னும் பல அதிகாரிகள் ஏழை மக்களுக்கு நேசக்கரம் நீட்ட தயாராகவே உள்ளனர் என்ற செய்திதான் இந்த சம்பவத்தில் மறைந்துள்ளது.
எனவே, நம்மிடமுள்ள ஏதாவது ஒரு சமூக சிந்தனையினை வெளிக்காட்டும் போது, அது ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றுமேயானால், இறை பொருத்தத்தினை இலகுவில் அடைய இதுவே மிகப்பெறும் வரமாக மாறிவிடும்.!
நன்றி.
சுலைமான் றாபி
Post a Comment