இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த மொரோக்கோ பற்றி, இதனையும் அறிந்து கொள்ளுங்கள்
- Fazhan Nawas -
2022 கத்தார் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த மொரோக்கோ அணியின் அரை இறுதிச் சுற்றுக்கான முன்னேற்றத்தைத் தொடர்ந்து பல இஸ்ஸாமிய அறிஞர்களாலும் பகிரப்பட்ட படம் இது.
மொராக்கே / மஃரிப் என்பது பொதுவாக Land of Saints என்று அழைக்கப்படுகிறது. மொராகோ பற்றி பேசும் போது வாயில் வருபவர் இப்ன் பதுாதா என்ற நாடு காண் பயணியாவார். அவர் நன்கறியப்பட்டவர். மொரோக்கோலைச் சேர்ந்த "அபூ அல்பரகாத் யூசுப் அல் பர்பரி (Abu al-Barakat Yusuf al-Barbari) என்ற (மகான்/ ஞானி) தனி நபரின் முயற்சியால் முழு மாலைத்தீவும் முஸ்லாம் நாடாக மாறியதை வரலாற்றினூடாக அறிந்துகொள்கிறோம்.
இலங்கையின் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட "அட்டுளுகம" என்ற முஸ்லிம் கிராமத்தில் மொரோக்கோ வம்சாவளியிரின் பரம்பரையினர் இன்று வாழ்ந்துவருகின்றனர்.
Barbar/ Berber தமிழில் பர்பர் என்பது மொரோக்காவின் செல்வாக்கு மிகுந்ந கோத்திரத்தின் பெயராகும்.
ஸ்பெய்னைக் கைப்பற்றிய
தாரிக் இப்னு ஸியாத்,
இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி
இமாம் பூஸரி
இப்னு ருஷ்த்
விமானத்தை உருவாக்கத்தின் முன்னோடி இப்ன் பிர்னாஸ், இப்ன் பதூதா போன்றவர்களும் பாபர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்
உலகின் முதல் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் கராவீய்யீனும் மொரேக்காவோவில் உருவானது.
தீஜானிய்யா, ஷாதுலிய்யா, தர்காவிய்யா, ஸர்ரூகிய்யா போன்ற பெரும் தரீக்காக்ளின் தோற்றமும் மொரோக்கோவில் இடம்பெற்றது.
இலங்கையில் பின்பற்றப்படும் ஷாதுலிய்யா தரீக்காவின் பிரதான கிளையான "பாஸிய்யா" வின் ஸ்தாபகரான இமாம் அல்பாஸியும் மொரோக்வைச் சேர்ந்தவர்கள்.
ஹதிஸ் துறைக்கு பங்களிப்புச் செய்த இன்று வரை ஆயிரக்கணக்கான முஹத்திஸ்களை உருவாக்கிய "ஹூம்மாரிகளும், கத்தானிகளும்" மொரோக்கோ மண்ணில் உருவானவர்களே.
இஸ்லாத்தின் Traditional islamic scholarship இன்று வரை வரை பாதுகாக்கப்படும் நாடுகளின் சிரியா, யெமன், அல்ஜீரியா, முரித்தானியா மொராக்காே ஆகிய நாடுகள் பிரதானமாவை.
இதனால் தான் பெரும்பாலான அறிஞர்களால் மெரோக்கோ Land of Saints என்று அழைக்கப்படுவதாக இருக்கக் கூடும்.
படம்: மொராக்கோவில் தோன்றிய ஆன்மீகத் தலைவர்களின் பெயர்கள் ஒரு உதைபந்தாட்ட மைதானத்தில் எழுதப்பட்டுள்ளது.
Post a Comment