Header Ads



முஸ்லிம் வாக்குகளின் துணையுடன், மீண்டும் ஜனாதிபதியாவாரா ரணில் - அவசரத் தேர்தல் வருமா..??


உள்ளூராட்சி சபைத் தேர்தலை அப்படியே ஒத்தி வைத்துவிட்டு உடனடியாக அதிபர் தேர்தல் ஒன்றுக்குச் செல்வது குறித்து மந்திராலோசனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகிய மூவரும் ஒன்றிணைந்தே இது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர்.


இந்தச் சந்திப்பில் வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை எனவும், மூடிய அறைக்குள்ளேயே ஆலோசனை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இது குறித்து வெளிவந்த செய்திக்குறிப்பில், “இந்த ஆலோசனையை முதலில் சமர்ப்பித்தவர் வஜிர அபேவர்தன.


அப்படி உடனடியாக அதிபர் தேர்தலை நடத்தினால் அதை எவ்வாறு வெற்றி கொள்வது என்ற வழிகள் சிலவற்றையும் அவர் பசில் ராஜபக்சவிடம் விளக்கிக் கூறியுள்ளார்.


4 வருடங்கள் நிறைவில் அதிபர் விரும்பினால் அதிபர் தேர்தலை நடத்தலாம். அவசரம் ஏற்பட்டால் அடுத்த வருடம் நடுப் பகுதியில் தேர்தலை நடத்தலாம்.


இதை வைத்துக்கொண்டு வேறு எந்தத் தேர்தலையும் நடத்தாது அடுத்த வருடம் நடுப்பகுதியில் அதிபர் தேர்தலை நடத்துவோம் என்று வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.


அவ்வாறு நடத்தினால் வடக்கு - கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளும் மலையகத் தமிழர்களின் வாக்குகளும் ரணிலுக்கு கிடைக்கும் என்று வஜிர சுட்டி காட்டியுள்ளார்.


தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், தமிழர்கள் நிச்சயம் ரணிலுக்கே வாக்களிப்பர் என்றும் முஸ்லிம்களும் அவ்வாறு செய்வார்கள் என்றும் வஜிர குறிப்பிட்டுள்ளார்.


மொட்டுக் கட்சியின் கைகளில் இருக்கும் சிங்கள வாக்குகளை பெற்றுத் தருவதற்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் எந்தவித சிக்கலும் இன்றி இலகுவாக ரணிலால் வெல்ல முடியும் என்று வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்” - என்றுள்ளது. IBC

2 comments:

  1. அடுத்தவருடம் நடுப்பகுதியில் தேர்தலை நடாத்துமாறு வஜிர அபேவர்தன கூறினாராம். அவ்வாறு நடத்தினால் வடக்கு - கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளும் மலையகத் தமிழர்களின் வாக்குகளும் ரணிலுக்கு கிடைக்கும் என்று வஜிர சுட்டி காட்டியுள்ளார். இவனைப் போன்ற மீஹரக்குகள் தான் இந்த நாட்டைக்குட்டிச் சுவராக்க திட்டம் போடுபவர்கள். ஆனால் சூழ்ச்சிகளுக்கெல்லாம் பெரிய சூழ்ச்சிக்காரர் அனைத்தையும் நன்றாகவும் நுணுக்கமாகவும் நோட்டமிடுகின்றார். அவரின் செயல்பாட்டின் எந்த அநீதியும், அநியாயமும் யாருக்கும் ஏற்பட மாட்டாது. அதற்கு அவரே அத்தனை மனிதர்களுக்கும் வாக்களித்திருக்கின்றார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.