பல்கலைக்கழக மாணவர்களுக்கு, போதை பொருள் விநியோகித்தவன் கைது
அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பல்கலைக்களக மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகித்து வந்த வியாபாரியின் வீட்டை நேற்று (18) மாலையில் முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்து கஞ்சா தூள் மற்றும் மாவா என்ற போதை பொருள் பெருமளவில் மீட்டதுடன் 41 வயதுடைய போதை பொருள் வியாபாரியை கைது செய்துள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று மாலை 5 மணிக்கு ஒலுவில் பிரதேசத்திலுள்ள போதை பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன் போது அங்கு வியாபாத்தில் ஈடுபட்டிருந்த 41 வயதுடைய வியாபாரியை கைது செய்ததுடன் கஞ்சா மற்றும் புகையிலை கலந்து 300 கிராம் தூள், மாவா என்றழைக்கப்படும் 1 அரை கிலோ போதைபொருள் மற்றும் கஞ்சாவை புகைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒ.சி.பி. என்ற பொருள் 30 பெட்டி என்பவற்றை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட வியாபாரி இந்த போதை பொருளை நீண்ட காலமாக அந்த பகுதியிலுள்ள பல்கலைக்கழகத்தில் கற்றுவரும் மாணவர்களுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-சரவணன்-
Post a Comment