Header Ads



இலங்கையில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய மலைப்பாம்பு


வயல் பகுதியிலிருந்து பாரியளவிலான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.


மடுல்சீம காவல்துறை பிரிவில் உள்ள வயல் பகுதியிலேயே இந்த 14 அடி நீளமான மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.


இன்று (05)  மடுல்சீம -எக்கிரிய பகுதியில் உள்ள வயல் ஒன்றில் குறித்த பாம்பை லுணுகலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் சிவில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கண்டுள்ளார்.


இதனையடுத்து அவர் அப்பிரதேச மக்களுக்கு அறிவித்த நிலையில், பிரதேசவாசிகளால் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு எக்கிரிய காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.


குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மலைப்பாம்பை காணாவிட்டால் ஏதோவொரு உயிரை மலைப்பாம்பு பறித்திருக்குமென அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர். IBC

No comments

Powered by Blogger.