உள்நாட்டில் மாத்திரம் ஆயிரக்கணக்கான மில்லியன்களை கடனாக செலுத்த வேண்டியுள்ள அரசாங்கம்
அரசாங்கம் உள்நாட்டில் பல மில்லியன் ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோகஸ்தர்கள், ஒப்பந்தக்காரர்கள், அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளுக்கு இவ்வாறு பணம் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு சுமார் ஆயிரம் பில்லியன் ரூபாவிற்கு மேல் பணம் செலுத்த வேண்டியுள்ளது.
மின்சார விநியோகஸ்தர்களுக்கு 100 பில்லியன் ரூபாவும், ஒப்பந்தக்காரர்களுக்கு 300 பில்லியன் ரூபாவும், வங்கித்துறைசார் நிறுவனங்களுக்கு 600 பில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டியுள்ளது.
ஹோட்டல்துறை மற்றும் ஏனைய துறைகளுக்கும் அரசாங்கம் பெருந்தொகை பணத்தை செலுத்த நேரிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment