Header Ads



பயணிகளை ஏற்றியபடி போட்டி போட்டு ஓடிய பேரூந்துகள்


வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஓர் பேரூந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.


வவுனியா - மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று (17) காலை இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் வீதியூடாக செட்டிக்குளம் செல்லும் தனியார் பேரூந்தும் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேரூந்துகளும் குறிப்பிட்ட இடத்திலிருந்து போட்டிக்கு சென்றுள்ளன. இதன் போது குறித்த தனியார் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.


இவ்விபத்தில் பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


-தீபன்-

No comments

Powered by Blogger.