கிராமங்களுக்கு சென்று தேர்தலுக்கு தயாராகுங்கள் - பெரமுன உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை
நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு நாட்டின் உண்மையான நிலைமையை விளக்குமாறு ஜனாதிபதி பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சிகள் தற்போது தேர்தலை கோருவதாக பொதுஜன பெரமுன எம்பிக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்த போது, தேர்தலை நடத்துவது குறித்து கவலைப்பட வேண்டாம் என ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் என தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த விடயங்களை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைத்தார். TL
Post a Comment