ராஜபக்சக்கள் திருந்துவார்கள் என்று நாங்கள் மட்டுமல்ல மக்களும் எதிர்பார்த்தார்கள்
நீங்கள் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்குப் பாடுபட்டீர்கள். ஆனால், இறுதியில் அவர்களை நீங்கள் வெறுத்தமைக்குக் காரணம் என்ன? அவர்களை மக்கள் விரட்டியடிக்கக் காரணம் என்ன?' என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விமல் வீரவன்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச - கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இந்த நாட்டில் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியவர்கள். அப்படியான தலைவர்களைத் தோல்வியடைந்த தலைவர்களாக வீட்டுக்கு அனுப்பிவைக்க நாம் விரும்பவில்லை.
ஆனால், அவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் இறுதியில் எல்லாம் தலைகீழாக மாறின . மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருக்கும் போதே கௌரவமாக ஓய்வு பெற வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.
2015இல்தான் ராஜபக்ச குடும்ப ஆட்சி பற்றிப் பரவலாகப் பேசப்பட்டது. அதனால் அந்தக் குடும்பம் தோல்வியடைந்தது. மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வந்தபோது அவர்கள் திருந்துவார்கள் என்று நாங்களும் மக்களும் நினைத்தோம்.
அது நடக்கவில்லை. 2015 இற்கு முன் ராஜபக்ச குடும்பத்தில் 3 பேர்தான் அமைச்சர்கள் 2019 இல் 5 பேர் அமைச்சர்கள். குடும்ப ஆட்சியில் அக்கறை செலுத்திய ராஜபக்சக்கள், நாட்டினதும் மக்களினதும் நலன்களில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை.
முன்னர் (2015 இற்கு முன்) போன்றே செயற்பட்டார்கள். இதனால் சீற்றமடைந்த மக்கள், ராஜபக்சக்களைக் கூண்டோடு விரட்டியடித்தார்கள் என தெரிவித்துள்ளார். twin
வௌிநாடொன்றிலிருந்து இலங்கையின் அபிவிருத்தி நோக்கமாக வழங்கப்பட்ட நன்கொடை 800 கோடி ரூபாக்கள் அல்லது டொலர்களை அப்படியே விழுங்கிய செய்து பரவலாகி மஹிந்த பிரதமராக இருந்தபோது மஹிந்தையை விமர்சிக்க கோபடைந்த மஹிந்த பூருவன்ஸையை ஒரு கை பார்க்க முயற்சி செய்தபோது, ஓடிப்போய் அவனுடைய காலையும் பின்புறத்தையும் வருடி மஹிந்தையுடன் பூருவன்ஸ சேர்ந்து கொண்டு இரண்டு கள்ளர்களும் தொடர்ந்தும் பொதுச் சொத்தைக் களவாடுவதில் தொடர்ந்தும் ஈடுபட்டதாக பல பத்திரிகைகள் கடந்த காலங்களில் குறிப்பிட்டன. அவை தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். இப்போது மஹிந்த ஒட்டாண்டியாகியவுடன் பூருவன்ஸ மஹிந்தையை விமர்சிக்க தொடங்கியிருக்கின்றான்.இந்தவகையான போக்கிரிக்கூட்டம் இந்த நாட்டிலிருந்து முற்றிலும் இல்லாமலாக்கப்படும் வரை இந்த நாட்டுக்கு விடிவே இல்லை. பாஸ்ட்போர்ட் மோசடியில் சிறை செல்லக் காத்திருக்கும் பூருவன்ஸவின் மனைவியை உடனடியாகக் காப்பாற்ற இந்த அரசின் உயர் மட்டம் எற்கனவே உத்தரவாதமளித்துவிட்டதாக செய்திகள் பரவுகின்றன. இ்துதான் இந்த நாடும் அதன் சட்டங்களும். அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம், அதிகாரவர்க்கத்தம் அதன் அடிவருடிகளுக்கு மற்றொரு சட்டம் என்ற அமைப்பு இருந்தால் அந்த நாட்டுக்கு எஞ்சியிருப்பது அழிவும் இழிவும் தான்.
ReplyDelete