பொலிஸாரின் மனிதாபிமானச் செயற்பாடு
பிரயாணச்சீட்டு வாங்கவும் வழியற்ற ஏழை வயோதிப பெண்ணொருவருக்கு பாதுக்கை புகையிரத நிலைய அதிபர் விதித்த தண்டப் பணத்தை பொலிஸார் செலுத்திய நெகிழ்ச்சிகரமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (07.12.2022) பதிவாகியுள்ளது.
மதவழிபாடுகளுக்குச் செல்வதற்காக 70 வயதான வயோதிப பெண்ணொர் அங்கம்பிட்டிய தொடருந்து நிலையத்தில் இருந்து பாதுக்கை வரை தொடருந்தில் பயணித்துள்ளார்.
பிரயாணச்சீட்டு இன்றி தொடருந்தில் பயணம் செய்த குற்றத்திற்காக அவரைக் கைது செய்த தொடருந்து நிலைய அதிபர், பாட்டிக்கு 3600 ரூபா அபராதம் விதித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வயோதிப பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரின் வறுமைத் தோற்றம் மற்றும் பின்னணி பற்றி அறிந்து கொண்ட பாதுக்கை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய பொலிஸார், வயோதிப பெண்ணுக்கு உடனடியாக உணவு வழங்கி அன்பாக உபசரித்துள்ளார்கள்.
அதன் பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து வசூலித்த பணத்தில் பாட்டிக்கான அபராதத் தொகையை செலுத்தியதுடன், வீடு திரும்பிச் செல்வதற்கான வழிச் செலவுக்கும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் வயோதிப பெண்ணின் கையில் ஒரு தொகைப் பணத்தையும் கொடுத்து அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment