Header Ads



90 சந்தேக நபர்களிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு, 11 தினங்களாகியும் எவரும் கைதாகவில்லை


தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரையில் 90 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் பல பிரிவுகளின் கீழ் விசாரணை இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினேஷ் ஷாஃப்டர் மரணித்தமை தொடர்பில், மனித கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கான விசாரணை பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் சீ.டீ விக்ரமரத்ன ஆகியோருக்கிடையே நேற்றுமுன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது.


இதன்போது, மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளார்.


அத்துடன் விசாரணை தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்கால செயற்பாடுகள் குறித்து பொலிஸ் மாஅதிபரால் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கபடுகொலை, ஈஸ்டர் ஞாயிறு படுகொல போன்ற ஒன்று தான் தினேஷ் ஷாப்டரின் படுகொலையும் பட்டப்பகலில் நடாத்தப்பட்டது. அதன் கொலையாளிகளை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. அந்த கொலையை தினேஷின் குடும்ப செலவில் ஸ்கொட்லாந்து பொலிஸிடம் ஒப்படைத்தால் மிகக் குறுகிய காலத்தில் கொலையாளியைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக அது போன்ற ஒ்ரு முயற்சி பேசப்பட்டால் அது இறுதியில் ஆபத்தில் முடியக்கூடும். விசாரணைகளின் இறுதியில் சிலவேளை பறக்கும் தட்டில் வந்த கண்களுக்குத் தென்படாத அதிசய மனிதர்கள் இந்தக் கொலையைச் செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார்கள் தீர்மானத்துடன் விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

    ReplyDelete

Powered by Blogger.