Header Ads



புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டி, 8 கட்சிகளுடன் பேச்சு, விரைவில் சின்னம் குறித்து முடிவு


உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


இந்த நேரத்தில் தேர்தல் கேட்கப்படுவதன் காரணம் அரசியல் தேவையைத் தவிர உண்மையான தேர்தலின் தேவை ஒன்று அல்ல.


நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார் எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க அரசு தயாராக உள்ளது என்றார்.


புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்காக ஏற்கனவே 8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் சின்னம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் 

பின்வருமாறு கூறினார்.


 கொரோனா தொற்று காரணமாக உள்ளூராட்சித் தேர்தலை ஓராண்டுக்கு ஒத்திவைக்கும் நிலை அரசுக்கு  ஏற்பட்டது. தேர்தல் தள்ளிப்போகும் என்று நாங்கள் யாரும் கூறவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் அப்படியொரு சித்தாந்தத்தை நாட்டில் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றன.


கடந்த காலங்களிலே நடந்த விடயங்கள் திருத்தப்படுவது  தாமதமானால் பழைய முறையிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன்.


ஐ.தே.க, ஸ்ரீலங்கா கட்சி, மொட்டுக் கட்சி ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒரே கொள்கைக்கு வந்திருப்பது இந்த தருணத்தில் மிகப்பெரிய சாதனையாகும். தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். ஜே.வி.பி உட்பட சில கட்சிகள் எப்போதும் பெருமையடிப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யவில்லை.


அமைதியான போராட்டத்தை சிலர் அபகரித்தனர். போதைக்கு அடிமையானவர்களும், கஞ்சா வியாபாரிகளும், விபச்சாரிகளும் அதில்  இருந்தார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர். பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்துதல், வீடுகளை எரித்தல் போன்றவை போராட்டத்தில் இருந்தே ஆரம்பித்தது.


நாட்டில் நிம்மதியாக வாழ்வது, தாம் பெறும் சம்பளத்திற்கு ஏற்ற பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்குவது போன்ற விடயங்களைத் தவிர மற்றுமொரு போராட்டத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை.


இந்த நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது என்று நாம் பார்க்க வேண்டும். இன்று நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வரும்போது வெளிநாட்டு கையிருப்பு அதிகரிக்கிறது. பின்னர் போராட்டம் தொடங்குகிறது.


இந்த நெருக்கடியை நாம் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். தனித்தனியாக செயற்படுவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.



2022.12.18

No comments

Powered by Blogger.