Header Ads



6 பேர் கொண்ட ஒரு குடும்பத்தை, அப்படியே சாகடித்த ஒரேயொரு பல்லி


நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் ஆறு பேர் கொண்ட குடும்பம் ஒரு பல்லியால் உயிரிழந்துள்ளது. ஜோன் சாமுவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இருவர் ஆகியோரே இந்த துர்ப்பாக்கிய மரணத்தை தழுவியுள்ளனர் .


சில தினங்களுக்கு முன் சாமுவேல் வசித்த வீட்டில் இருந்து சத்தம் வராததால், அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, ​​சாமுவேல் உள்ளிட்டோர் ஒவ்வொரு அறையிலும் இறந்து கிடந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார் . இரவு உணவு உண்ட பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், உணவில் விஷம் கலந்தமையே மரணத்திற்கு காரணம் எனவும் நைஜீரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது .


அக்கம்பக்கத்தினர் வீட்டைச் சோதித்தபோது சாமுவேல் மற்றும் பலர் இரவு உணவிற்கு எடுத்துச் சென்ற சூப் பானையில் பல்லி இறந்து கிடந்ததாகவும், அந்த பல்லி தான் மரணத்துக்குக் காரணம் என்றும் நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. TL

No comments

Powered by Blogger.