மேலும் 64 பில்லியன் ரூபாய்களை, அச்சடித்து தள்ளிய மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கி மேலும் 64 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. உள்நாட்டுக் கடனைத் தீர்ப்பதற்கு போதுமான அளவு பத்திரங்கள் விற்பனை செய்யப்படாமை காரணமாக மத்திய வங்கி இந்த தொகையை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
160 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பிணைமுறி ஏலத்தின் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு 124 பில்லியன் ரூபாவையே ஈட்ட முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் காரணமாகவே மேலும் 64 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு கடனை செலுத்துவதற்கு பணம் சம்பாதிப்பதற்கான பிற ஆதாரங்கள் இல்லாததால் பணம் அச்சிடுவதற்கு வழிவகுத்தது. TW
Post a Comment