60 நாட்களில் 68 பில்லியன் ரூபாய்களை வருமானமாக ஈட்டிய மின்சார சபை - அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமைச்சர்
தற்போதைய கட்டண முறைமையின் அடிப்படையில் , இலங்கை மின்சார சபை நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் .
அத்துடன் , ஒக்டோபர் மாதம் 33.6 பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான உலை எண்ணெய் , நப்தா மற்றும் டீசலை கொள்வனவு செய்வதற்கு 35 பில்லியன் ரூபாவும் , நிலக்கரி கொள்வனவுக்காக 38.45 பில்லியன் ரூபாவும் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார் .
இதேவேளை , புதிய மின் கட்டண திருத்தம் மற்றும் மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பல மின்சார தொழிற்சங்கங்களுடன் இன்று ( 29 ) காலை கலந்துரையாடியுள்ளார் . இலங்கை மின்சார சபையின் செலவு முகாமைத்துவம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .
Post a Comment