5 பில்லியன் டொலர் கடனை எதிர்பார்த்திருக்கிறோம்
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தவிர, பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து அடுத்த வருடத்தில், 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான கடனை இலங்கை எதிர்பார்க்கிறது என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இன்று (14) தெரிவித்தார்.
அரச சொத்துக்களை மறுசீரமைப்பதன் மூலம் அரசாங்கம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட முடியும் என்றும் ரொய்ட்டர்ஸுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் மிகப் பெறுமதியான தேசிய சொத்துக்களை விற்கும் கள்ள வியாபாரத்தில் இந்த சப்ரியும் சேர்ந்து கொண்டாரா? அதன் மூலம் 3 பில்லியனும் சர்வதேச நாணய நிதி (1.9பில்லியன் டொலரும்) மற்ற 0.1 பில்லியன் டொலரை எங்கோ இருந்து கிடைப்பதாகவும் கூறுவது மிகப் பெரிய கற்பனையும் படுபொய்யும். இலங்கைக்கு கடனாக ஆயிரம் டொலர் வழங்குவதற்கு உலகில் எந்த நாடோ நிறுவனமோ கிடையாது. இந்த படு பொய்களைச் சொல்லி இவர் யாரை ஏமாற்ற முயற்சி செய்கின்றார். இதுதானா வௌிநாட்டுத்துறையும் இராஜதந்திரமும். யாராவது பிச்சை போடும் வரை பார்த்துக் கொண்டிருப்பது இவருக்குப் பெருமை. இவர்களின் மண்டையில் என்ன இருக்கின்றது என்பதை ஆராய குறைந்தது பத்து வருடங்களாவது அங்கொடையில் நிறுத்தி பலநூறு பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.
ReplyDelete