என்னை 'பஸ் மேன்' என அழைத்து அவமானப்படுத்துவதால் பிரச்சினையில்லை - இதுவரை 50 பேருந்துகள் வழங்கிய சஜித்
‘பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 50 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று அ/தபுத்தேகம மத்திய கல்லூரிக்கு இன்று (27) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலையில் அரசியலுக்கு,வியாபாரத்திக்கு தொடர்புடைய முன்னாள் பழைய மாணவர்கள் சிலர் இருந்தாலும்,அவர்கள் தங்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கு எதுவும் செய்வதில்லை எனவும்,பேருந்துகளை இலவசமாக வழங்கியதற்காக 'பஸ் மேன்' என்று அழைக்கப்பட்டாலும்,அவதூறுகள் மற்றும் அவமானங்களை சிறிதும் பொருட்படுத்தவில்லை எனவும்,மகாத்மா காந்தி கூறியது போல்,வேலை செய்பவர்கள் மற்றும் வேலை செய்வதாக காட்டிக்கொள்பவர்கள் என இரண்டு குழுக்கள் உள்ளன எனவும்,எனவே எத்தனை பேர் புள்ளிகளைப் பெற்றாலும் உழைக்கும் மக்களுடன் இணைந்து நின்று நாட்டுக்காக எதனையும் செய்யத் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கான பேரை பஸ்களில் கூட்டி கூட்டங்கள் நடத்தி மக்கள் நம் பக்கம் தான் என்பதை காட்டுவதை விட களத்தில் இறங்கி வேலை செய்ய தயாராக இருப்பதாகவும்,தற்போது எமது நாட்டுக்கு தேவைப்படுவது உழைக்கும் மக்களே எனவும், அந்த மக்களைக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப தான் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் எமது நாட்டை வறிய நாடு என அமைச்சுக்களைப் பெற்று அமைச்சரவை அங்கீகாரத்துடன் பெயர் சூட்டியுள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இது வேடிக்கையானது எனவும், எமது நாட்டில் கல்வியைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக சிறைச்சாலைகளை தயார்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் செயற்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.ஆனால், ஒரு பாடசாலை திறக்கும் போது, பல சிறைகள் கூட மூடப்படும் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.
வங்குரோத்து நிலையில் உள்ள நமது நாட்டில் நிலக்கரி,மருந்துகளில் கூட சுரண்டல் இன்னும் நடைபெற்று வருவதாகவும், இவை அனைத்தும் மோசடியான பரிவர்த்தனைகள் என்றும்,மக்களை சுரண்டி வரி விதிப்பதை நாங்கள் ஏற்கவில்லை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நடைபாதை வியாபாரிகளிடமிருந்தும் கூட வரி விதிக்க இந்த அரசாங்கம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
Post a Comment