5,000 போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் பிடிபட்டான் - ஆறுகால் மடத்தில் சம்பவம்
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெய்வனாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என உப பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தெரிவித்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கையின் போது 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment