கஞ்சிபானை இம்ரான் 50 இலட்சம் ரூபா பிணையில் விடுவிப்பு - வெளிநாடு பறக்கத் தடை
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர் என கூறப்படும் கஞ்சிப்பானை இம்ரான் நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி வழங்கப்பட்ட நிபந்தனைகளை கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் பூர்த்தி செய்ததன் பின்னர் சந்தேகநபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் 50 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஹெரோயின் கடத்தல் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சக நண்பரை விடுவிக்குமாறு வெளிநாட்டிலிருந்து உதவி பொலிஸ் அத்தியட்சகரை அச்சுறுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கஞ்சிபானை இம்ரானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், சட்ட மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இது பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு உரிய குற்றச்சாட்டாக பொருந்தாது என்பதால் அவருக்கு பிணை வழங்குமாறு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment