நாட்டில் 4 இலட்சம் பேர் கஞ்சா அடிப்பதாக அறிவிப்பு
இலங்கையில் சுமார் 120,000 பேர் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
மேலும், கிட்டத்தட்ட 400,000 பேர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் அதன் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்தார்.
பொதுவாக, சிகரெட், மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதே வேளையில், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார்.
ஹெராயின் மற்றும் மரிஜுவானா பாவனையாளர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை பெறாமலேயே போதைப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துவதாக நாணயக்கார கூறினார்.
இந்த நாட்டுக்கு போதைப் பொருட்களையும் கள்ளத்தனமாக வௌிநாடுகளில் இருந்து கொண்டுவந்து இளைஞர்களையும் யுவதிகளையும் போதைக்கு அடிமையாக்கி பிழைக்கும் பாராளுமன்றத்தி்ல் பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மகோடிஸ்களை கைது செய்து நீதிமன்றத்துக்கு முற்படுத்துமாறு மத,இன,சாதி வேறுபாடின்றி இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு நீண்ட போராட்டமும் கண்டனமும் ஒருமித்து தெரிவித்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தினால் மாத்திரம் போதைப்பொருள் பாவனைக்கு ஒரு தீர்வை எட்டமுடியும். அதுதவிர தேவையில்லாத புள்ளிவிபரங்களும் தகவல்களும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவை நேரம்,காலங்களை வீணடிக்கும் ஒரு தேவையில்லாத முயற்சி மாத்திரம்தான்.
ReplyDelete