Header Ads



பணம் எங்கிருந்து வந்தது எனக்கேட்டு, பாண் வாங்க வந்த 4 வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த குடிகாரன்


சூன் பான் முச்சக்கர வண்டியொன்றில் பாண் வாங்க வந்த நான்கரை வயது குழந்தையொன்றை நபர் ஒருவர் தூக்கி தரையில் அடித்த சம்பவம் ஒன்று தம்புள்ளையில் பதிவாகியுள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க தம்புள்ளை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.


தம்புள்ளை கண்டளம கெப்பல பிரதேசத்தை சேர்ந்த அஜித் வர்ணசூரிய என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


காயமடைந்த குழந்தையை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து வைத்தியசாலை வைத்தியர்கள் சம்பவம் தொடர்பில் சந்தேகம் அடைந்து தம்புள்ளை வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.


கண்டளம பகுதியில் உள்ள வீட்டில் தாய், தந்தை மற்றும் தாத்தாவுடன் குழந்தை தங்கியிருந்த போது, ​​வீதியில் சூன் பான் முச்சக்கர வண்டி சத்தம் கேட்டு தனது தாத்தாவிடம் பாண் வாங்க பணம் வாங்கி குழந்தை வீதிக்கு அருகில் ஓடி வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


பின்னர் அந்த இடத்தில் குடிபோதையில் இருந்த ஒருவர் இந்த குழந்தையை திட்டிவிட்டு சூன் பான் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டு இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments

Powered by Blogger.