Header Ads



450 க்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழப்பு - கொட்டில்களில் தங்கவைத்து குளிரில் இருந்து பாதுகாக்குமாறு கோரிக்கை


சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயிரிழந்துள்ளன.


நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் குளிர் காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்தார்.


அதேவேளை யாழ் மாவட்டத்தில் 80ற்கும் மேற்பட்ட ஆடுகளும் 20 தொடக்கம் 30ற்கு மேற்பட்ட மாடுகளும் உயிரிழந்துள்ளன.


மழையுடன் கூடிய குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என்பதால் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும் இவ் இறப்பு இன்னும் கூடலாம் என வைத்திய அதிகாரி தெரிவித்துக் கொண்டார்


குறிப்பாக நாய்கள் பூனைகள், கோழிகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றையும் பாதுகாப்பான கொட்டில்களில் தங்க வைத்து குளிர் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


-யாழ். நிருபர் பிரதீபன்-

No comments

Powered by Blogger.