44 ஆவது பஸ்ஸை அன்பளிப்புச் செய்தார் சஜித்
அதேபோல்,ஒவ்வொரு பாடசாலையிலும் தொழிநுட்பம் போலவே ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த வேண்டும் எனவும்,தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் சிங்களம் மட்டுமே அவசியம் என்று கூறுவதால்,சர்வதேச மட்ட கல்விக்கான வரமதனை எமது நாட்டு பிள்ளைகள் இழந்துள்ளனர் எனவும்,இந்நிலையை மாற்றி, ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின் எக்கட்சி எதிர்த்தாலும்,இந்நாட்டில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பாடசாலை கட்டமைப்பிலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி கல்வி திட்டங்களை வினைதிறனாக செயல்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அதேபோன்று நாற்பத்து மூன்று இலட்சம் பாடசாலை மாணவர்களின் கல்வி உரிமையும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி உரிமையும் அடிப்படை உரிமையாக்கப்பட்டு நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பில் சேர்க்கப்படும் எனவும், இதன் மூலம் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்நாட்டின் பிள்ளைகளுக்கு சர்வதேச தரத்திலான கல்வியை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும்,இதை மீறினால் உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் சொல்ல வேண்டிவரும் எனவும்,கட்சி அரசியல் எதுவாக இருந்தாலும்,இந்நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் எந்த ஜனாதிபதியோ, பிரதமரோ,கல்வி அமைச்சரோ அதே சட்ட அழுத்தங்களுக்கு உப்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் 44 ஆவது பேருந்தையும் அன்பளிப்புச் செய்தார்!
நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 44 ஆவது கட்டமாக நாற்பத்து ஆறு இலட்சம்(5,000,000) பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்றை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று மஹரகம மத்திய கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கி வைத்தார்.
புதிய உலகை நோக்கிய பயணத்திற்கு புதிய கல்விப் புரட்சி அவசியமெனவும்,டிஜிட்டல் கல்விக்கு முன்னுரிமையளிக்க வேண்டும் எனவும்,கோவிட்-19 காலகட்டத்தில் நமது நாட்டின் மாணவர்கள் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும்,நமது நாட்டைப் போல வருமானம் கொண்ட உலகின் பிற நாடுகள் யுனெஸ்கோ போன்ற அமைப்புகளின் ஆதரவைப் பெற்று டிஜிட்டல் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், டிஜிட்டல் புரட்சிக்குத் தேவையான அடிப்படைச் சூழலை உருவாக்க முயலாமல் நம் நாடு செயலற்றுக் கிடந்தது எனவும், இது மிகவும் பிற்போக்குத்தனமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று அரசாங்கத்திற்கு சொந்தமான ஒவ்வொரு பாடசாலைகளிலும் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கத் தேவையான வளங்கள் பற்றாக்குறையாகவுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாகவும்,எமது நாட்டில் 40 சதவீத பாடசாலை மாணவர்களிடம் மட்டுமே கணினி மற்றும் டெப் உபகரணங்கள் உள்ளதாகவும், இது மிகவும் வருந்தத்தக்க நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இப்பாடசாலைக்கு பேருந்து வழங்கும் நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பும் போது கூட சிலர், அதை கேலியாக விமர்சித்து வருவதாகவும், இவ்வகையான பிற்போக்குச் சிந்தனை, மெத்தனப் போக்கிலான மனப்பான்மையுடன் இந்நாட்டு மக்கள் சிந்திக்கும் போது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்றாலும்,இவை நடைமுறையில் ஒத்துவராது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த போரினால் பாதிக்கப்பட்ட வியட்நாமும் ருவண்டாவும் கடுமையாக உழைத்து வருகின்றன எனவும்,ருவண்டா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு இத்தகைய இயலுமைகள் இருக்குமானால்,ஏன் நம்மால் முடியாது எனவும் கேள்வி எழுப்பினார்.
Post a Comment