வரலாற்றில் மிகப்பெரிய 400 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு (படங்கள்)
வரலாற்றில் மிகப் பெரிய தங்கக் கடத்தல் சுங்க அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 400 மில்லியன் ரூபா என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த நான்கு இலங்கையர்களை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சுங்க வளாகத்தில் சோதனையிட்டனர்.
இந்த நான்கு பயணிகளில் மூவர் இன்று (09) காலை டுபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கை வந்துள்ளனர்.
அவர்களைச் சோதனையிட்டபோது, அவர்களது பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் ஏராளமான திரவத் தங்கப் பொடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
Post a Comment