குவைத்தில் இலங்கை மாணவன் 3 தங்கப் பதக்கங்களை பெற்றார்
Indian Community School Kuwait (ICSK) இல் கல்வி பயிலும் இலங்கை மாணவன் மொஹமட் ஷீராஸ் இறுதிப் போட்டிகளில் அதீத திறமை காட்டி 3 தங்கப் பதக்கங்களை வென்று தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்தி உள்ளார்.
1- 1500 M
2- 3000 M
3- 4x400 M Relay
ICSK இப்போட்டிகளில் 341 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது. ICSK தொடர்ந்து 19 ஆவது ஆண்டாகவும் இப்போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. 307 புள்ளிகளைப் பெற்று United Indian School இரண்டாம் இடத்தையும், 247 புள்ளிகளைப் பெற்று Fahaheel Al Wataniya Indian Private School மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை தர்கா நகரைச் சேர்ந்த மொஹமட் ஷீராஸ் மற்றும் திருமதி மஹ்ரூசா கலீல் தம்பதிகளின் புதல்வன் மொஹமட் ஷீராஸ் கல்வியிலும், விளையாட்டிலும் திறமை காட்டி வருகிறார்.
அடுத்து இவர் தேசிய மட்டப் போட்டிக்காக இந்தியா செல்ல தெரிவாகி உள்ளார். இந்தியா சென்று தேசிய அளவில் திறமை காட்டி உலகம் போற்றும் மிகவும் சிறந்ததொரு விளையாட்டு வீரராக வர நாம் இவரை வாழ்த்தி மகிழ்கிறோம்.
ஹரீஸ் ஸாலிஹ்
மாணவன் முஹம்மத் ஷீராஸ் குவைத்திலும் இந்தியாவிலும் ஏன் முழு உலகிலும் விளையாட்டிலும் கல்வியிலும் மிக உயர்ந்த இடத்தைப் பெற்று எமது பிள்ளைகள் கல்வி,ஒழுக்கம், விளையாட்டு, அனைத்திலும் முன்னணியில இருக்கின்றனர் என்பதை உலகுக்குக் காட்ட வேண்டும் என முஹம்மத் ஷீராஸுக்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.
ReplyDelete