அக்குறணை வெள்ளத்தால் 300 கோடி ரூபாய்க்கு நட்டம், 340 வீடுகள் சேதம் - மதிப்பீடு செய்ய 5 குழுக்கள்
- ஷேன் செனவிரத்ன -
கடந்த வாரம் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் அக்குறணை நகரில் ஏற்பட்ட வௌ்ளத்தால் 300 கோடி ரூபாய்க்கு அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அக்குறணை நகரை ஊடறுத்துச் செல்லும் பிஹாஓயகொட பெருக்கெடுத்ததால் அக்குறணை நகர் முழுவதும் வௌ்ளத்தில் மூழ்கியது.
இதனால் அம்பதென்னயிலிருந்து அக்குறணை 7ஆம் மைல்கல் வரையான வர்த்தக நிலையங்களும் 340 வீடுகளும் சேதமடைந்துள்ளதென அக்குறணை பிரதேச செயலாளர் இந்திகா அபேசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் மதிப்பீடு செய்ய அரசாங்கத்தால் 5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment