Header Ads



அக்குறணையில் வீடொன்றில் மீது கல், மண் மேடு வீழ்ந்து - 2 பேர் மரணம்


அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துனுவில வடக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கணபதி தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கல் மற்றும் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.


இதன்போது வீட்டில் 5 பேர் இருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.


இதன்போது 18 மற்றும் 19 வயதுடைய இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரதேசவாசிகள் பொலிஸாருடன் இணைந்து மண்ணை அகற்றி காயமடைந்தவர்களை மீட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.