2500 ஏக்கருக்கும் அதிகமான நிலம், சேனா புழுக்களால் நாசம்
பொலன்னறுவை மாவட்டத்தில் சோளப் பயிர்களை சேனா புழு தற்போது சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பலுகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் 2500 ஏக்கருக்கும் அதிகமான நிலம் சேனா புழுக்களால் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலுகஸ்வெவ பிரதேசத்தில் சோளச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு 3, 4 மாதங்கள் கடந்துள்ள போதிலும் சேனா புழு காரணமாக செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சேனா புழுவானது, சோளச் செடியின் மண்ணைத் தின்று செடியையே அழித்து விடுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Post a Comment