2023 இல் பிச்சைக் கிண்ணத்துடன், உலகம் முழுவதும் செல்லாதீர்கள்
பிறக்கப்போகும் 2023 ஆம் ஆண்டில் இலங்கை பிச்சைக் கிண்ணத்துடன் உலகம் முழுவதும் செல்லாமல், தேசத்தை கட்டியெழுப்ப புதிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
"புத்தாண்டில் நாடு முன்னேற புதிய கட்டமைப்பை உருவாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும், மேலும் பிச்சைக் கிண்ணத்துடன் உலகம் முழுவதும் செல்வதை நிறுத்த வேண்டும். அதைச் செய்யாவிட்டால் தேசம் அழிந்துவிடும் என கர்தினால் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“2023 ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த 75 ஆவது வருடத்தைக் குறிக்கும். இலங்கையுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேறியுள்ளன, ஆனால் இலங்கை ஒரு ஏழை நாடு என்ற பிம்பத்தைப் பெற்றுள்ளது.
காலங்காலமாக தேசத்தை ஆட்சி செய்தவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளால் நாம் இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்,'' என அவர் தெரிவித்துள்ளார்.
"இலங்கை ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும், அதன் மக்கள் வேறுபாடுகளை மறந்து புதிய ஆண்டில் தேசத்தின் நலனுக்காக ஒன்றுபட வேண்டும்" என்று பேராயர் ரஞ்சித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Post a Comment