Header Ads



ஜனாஸாக்களை எரித்தபோதே அரசாங்கம் விழும் என்று நினைத்தேன், 2014 முதல் சவூதியுடன் பேச்சு - புரி­யாணி, வட்­டி­லாப்பம் சாப்பிடவில்லை


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

எமது நாட்டில் அடிப்­ப­டை­வாதம் பர­வு­வதைத் தடுப்­ப­தற்­கா­கவே நாங்கள் சவூதி அரே­பி­யா­வுடன் 2014 முதல் பேச்சு வார்த்­தைகள் நடத்தி வந்­துள்ளோம். நான் சவூதி அரே­பி­யா­வுக்கும் விஜயம் செய்தேன்.


புரி­யாணி சாப்­பி­டு­வ­தற்கும், வட்­டி­லாப்பம் சுவைப்­ப­தற்கும் நாம் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வில்லை என பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.


சிங்­கள ஊடக மொன்­றுக்கு அண்­மையில் வழங்­கிய செவ்­வி­யொன்­றிலே அவர் இவ்­வாறு கூறினார்.


அவர் தொடர்ந்தும் செவ்­வி­யின்­போது தெரி­வித்­த­தா­வது;

சவூதி அரே­பி­யா­வுடன் நாம் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொண்டு 2014 ஆம் ஆண்­டி­லி­ருந்து சவூதி தூது­வ­ரா­ல­யத்தின் பொறுப்பு வாய்ந்த அதி­கா­ரி­க­ளுடன் சில விட­யங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்­தினோம். அதா­வது இந்த அடிப்­ப­டை­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு எவ்­வா­றான பதில்­களைத் தேடிக்­கொள்­வது என்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டினோம். கொள்கை அடிப்­ப­டையில் எங்­க­ளுக்குள் பிரச்­சினை இருந்­தாலும் சவூதி நாட்­டுடன் எமக்குப் பிரச்­சி­னைகள் இருக்­க­வில்லை.


நாட்­டி­னையும் அர­சாங்­கத்­தையும் மக்கள் பிரித்­துப்­பார்க்க வேண்டும். கடந்த காலங்­களில் சவூதி அரே­பி­யா­வுடன் பரந்து பட்ட அளவில் பேச்சு வார்த்தை நடத்த எமக்கு சந்­தர்ப்பம் கிடைத்­தது. அவர்கள், நாங்­களோ, எமது நாட்டின் பாது­காப்பு பிரிவோ நினைத்­துக்­கூட பார்க்­காத அள­வுக்கு எதிர்­வரும் 15, 20 வரு­டங்­களில் இந்த அடிப்­ப­டை­வாதம் உலகை ஆட்­கொள்ளும் என்று ஊகித்து அதற்­கான திட்­டங்­களை வகுத்­துள்­ளார்கள்.


எவ்­வாறு உலகை அடிப்­படை வாதம் ஆட்­கொள்­ள­வுள்­ளது என்­பது தொடர்­பி­லான கருத்­துக்­களை எம்­முடன் பரி­மா­றிக்­கொண்­டார்கள். அடிப்­ப­டை­வாதம் தொடர்பில் நீங்­களும் அவ­தா­ன­மாக இருங்கள் என்று கூறி­னார்கள். சில நாடுகள் (அந் நாடு­களின் பெயர்­களைக் குறிப்­பி­ட­மு­டி­யாது.) உதா­ர­ண­மாக துருக்கி, கட்டார் போன்ற நாடுகள் அடிப்­படை வாதத்தைப் போஷிப்­ப­தற்­காக பெரு­ம­ளவு நிதியை செல­வி­டு­கின்­றன.இது அவர்­களின் சம­யக்­கொள்­கை­யாக இருக்­கலாம். அடிப்­ப­டை­வாதம் என்­பதை சில­வேளை அறி­யா­தி­ருக்­கலாம் என்­றாலும் இந்த செயல்­களின் விளை­வுகள் எல்லாம் சவூதி அரே­பி­யாவின் மீதே சுமத்­தப்­ப­டு­கின்­றன என்­றார்கள்.


இவ்­வா­றான நிலை­மை­களை அவர்கள் எமக்குத் தெளி­வுபடுத்­தி­னார்கள். நாங்­களும் எங்கள் நாட்டின் நிலை­மையை தெளி­வு­ப­டுத்­தினோம். ஒரு சில சம­யக்­கு­ழுக்­களின் நூல்கள் சிங்­களம்,தமிழ்,ஆங்­கில மொழியில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­மையை எடுத்­துக்­காட்­டினோம். அவர்கள் வியப்­புக்­குள்­ளா­னார்கள். அவர்­க­ளது நாட்­டினைச் சேர்ந்த தன­வந்­தர்கள் சிலரே அவர்கள் கூட அறி­யாத நிலையில் இவ்­வா­றான நூல்­களின் வெளி­யீ­டு­க­ளுக்கு உதவி செய்­தி­ருக்­கி­றார்கள் என்­றார்கள். இவ்­வாறு அவர்­க­ளது நாட்டின் தன­வந்­தர்­களால் வழங்­கப்­பட்­டு­வரும் நிதி­உ­த­வி­களைத் தடை­செய்­வ­தாக உறு­தி­ய­ளித்­தார்கள்.


நாங்கள் எமது நாட்டில் இவ்­வாறு அடிப்­ப­டை­வாதம் வள­ரு­வதை நிறுத்­திக்­கொள்­வ­தற்­கா­கவே அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டோம். அன்றி புரி­யாணி சாப்­பி­டு­வ­தற்கும் வட்­டி­லாப்பம் சாப்­பி­டு­வ­தற்­கு­மல்ல. அவர்கள் எமக்குப் பணம் தர­வு­மில்லை. சங்­கி­ரில்லா ஹோட்­டலில் நடந்த சந்­திப்­பு­களில் கோப்பி மாத்­திரம் அருந்­தி­யுள்ளோம். இந்தச் சந்­திப்­புகள் சங்­கி­ரில்­லாவில் நடந்ததா சவூ­தியில் நடந்­ததா என்று சிலர் கதை­ப­ரப்­பி­னார்கள்.


நாம் ஒரு­போதும் முஸ்­லிம்­களின் சமயம் தொடர்­பான விட­யங்­களை நிறுத்­திக்­கொள்­ளுங்கள் என்று கூற­வில்லை.ஹலால் சாப்பிடாதீர்கள் என்று கூறவில்லை.எமக்கு சாப்­பிட ஏற்­பாடு செய்­யாதீர்கள் என்றே கூறினோம். இது அவர்­க­ளது சமய உரிமை. ஏன் நாம் தடை செய்ய வேண்டும். இந்த விடயம் எமக்கு எதி­ரா­கவே சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டது.


நான் சவூதி அரே­பி­யா­வுக்கும் சென்றேன். கழுத்தை வெட்­டு­வார்கள் என்று நான் போகாமல் இருக்­க­வில்லை.அங்கு சென்று பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் ஈடு­பட்டேன். கொவிட் தொற்று காலத்தில் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்வதா? தகனம் செய்­வதா? என்­பதில் பாரிய பிரச்­சி­னைகள் உரு­வா­கின. மத்­திய கிழக்கு நாடுகள் அனைத்தும் இலங்­கைக்கு எதி­ராக இருந்­தன. 


முஸ்­லிம்­களின் கொவிட் சட­லங்கள் தகனம் செய்­யப்­ப­டு­வதை எதிர்த்­தன. இந்த மட­மைத்­த­ன­மான முடிவை அர­சாங்கம் எடுத்­த­போது அர­சாங்கம் வீழ்ந்­து­விடும் என்று நினைத்துக் கொண்டேன். நான் மாத்­தி­ரமே முஸ்­லிம்­களின் சட­லத்தை தகனம் செய்யும் தவ­றான தீர்­மா­னத்தை எடுக்க வேண்டாம். நிறுத்திக் கொள்­ளுங்கள் என்றேன். நிபு­ணர்­களின் தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி செவி­ம­டுத்ததால் அவர் அப்­பா­வி­யானார். இந்த பாவத்தைச் செய்­யா­தீர்கள் என்று நான்தான் கூறினேன்.


இந்த முடிவால் நாடு பெரிதும் பாதிக்­கப்­பட்­டது. மத்­திய கிழக்கில் வேலை செய்­த­வர்கள் சட்­ட­ரீ­தி­யாக நாட்­டுக்­குப்­பணம் அனுப்­பி­வைக்­க­வில்லை. அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு உண்­டியல் மூலமே பணம் அனுப்பி வைத்­தார்கள். நாட்­டிற்கு ஏற்­பட்ட இந்­நி­லை­மை­யி­லி­ருந்து மீட்க நான் முயற்­சிகள் மேற்­கொண்டேன்.


சவூதி அரே­பி­யா­வுடன் கதைத்தேன். எமது ஜனா­தி­ப­தியை சவூதி அரே­பி­யா­வுக்கு விஜயம் செய்­யும்­படி சவூதி அரே­பியா கூறி­யது. நிவா­ரண அடிப்­ப­டையில் எரி­பொருள் தரு­வ­தாகக் கூறி­னார்கள்.சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து இந்தச் செய்­தியை எடுத்து வந்து அமைச்சர் ஜி.எல்.பீரி­ஸிடம் கூறினோம்.


எமது ஜனாதிபதி சவூதிக்கு விஜயம் செய்ய விருப்பம் என உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்று இராஜ தந்திர ரீதியில் அனுப்பி வைக்குமாறு ஜி.எல்.பீரிஸிடம் கூறினோம்.ஒரு மாதகாலமாகியும் கடிதம் ஒன்று அனுப்ப முடியாமற்போனது.இவ்வாறு நாட்டை மீட்டெடுக்க முடியுமா?


எமது நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.நாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம். இதுவும் எமது ஒரு அரகலயதான். வேறான ஓர் அரகலய இது இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டும் இதில் அரசாங்கத்துக்கு அக்கறை இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli

No comments

Powered by Blogger.