Header Ads



2014 ஆம் ஆண்டுமுதல் கட்டாரில் 343 இலங்கைர்கள் உயிரிழப்பு


2014 ஆம் ஆண்டு முதல் கட்டாரில் பணியாற்றிய 343 இலங்கை பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . 


புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புக்கான காரணங்களாக இயற்கை மரணம் , தற்கொலை , கொலை , வீதி விபத்துகள் , ஏனைய விபத்துகள் , கொவிட் இறப்புகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாதவை என பட்டியலிடப்பட்டுள்ளன . 


அதற்கமைய , 2014 ஆம் ஆண்டு முதல் 207 இயற்கை மரணங்களும் , தற்கொலைகளால் 30 மரணங்களும் , வீட்டு வன்முறைகளால் 6 மரணங்களும் , வீதி விபத்துக்களால் 50 மரணங்களும் , பிற விபத்துக்களால் 35 மரணங்களும் , கொவிட் தொற்றினால் 14 மரணங்களும் மற்றும் ஒரு உறுதிப்படுத்தப்படாத மரணமும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது . 


இந்த ஆண்டில் , அக்டோபர் 31 ஆம் திகதி வரை 37 மரணங்கள் பதிவாகியுள்ளன . அத்துடன் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் முறையே 11 மற்றும் 3 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன . 


இந்த தகவல்களின் படி 2015 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன.


இதில் 29 இயற்கை மரணங்களும் , 4 தற்கொலைகளும் , ஒரு கொலையும் , 12 வீதி விபத்துகளும் , 6 பிற காரணிகளாலான மரணங்ளும் அடங்குகின்றன . அத்துடன் , 13 இயற்கை மரணங்கள் , 2 தற்கொலை மரணங்கள் , 3 கொலைகளும் , இரண்டு விபத்துக்களும் , ஒரு உறுதிப்படுத்தப்படாத மரணம் என 2020 ஆம் ஆண்டில் குறைவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . 

1 comment:

  1. பத்து அல்லது பதினைந்து வருடங்களில் ஒரு நாட்டில் நடந்த இறப்புகளின் எண்ணிக்கையை ஒட்டு மொத்தமாக வௌியிடுவதனால் உடனே வருவது அந்த நாடு பற்றிய வெறுப்பும், பாதிக்கப்பட்ட நாடு பற்றிய அனுதாபமும்தான். இந்த வெறுப்பையும் அனுதாபத்தையும் கிண்டு விட்டு கூத்துப் பார்க்கும் நாடகத்தை பீபீஸூ போன்ற மேற்குலகின் செய்தித்தாபனங்கள் அழகாகச் செய்து வருகின்றன. இந்த செய்தியைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாக நாடுகளை எதிர்க்கவோ வசைபாடவோ வேண்டாம். நடைபெறும் உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் கதார் நாடு இஸ்லாத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு செயலை மேற் கொண்டிருக்கின்றது. அதை சீரணிக்க முடியாத மேற்குலக செய்தித் தாபனங்கள் பல்வேறு கட்டுக்கதைகளையும் வெறுப்புணர்வுகளையும் கதார் நாட்டுக்கு எதிராகப் பரப்புகின்றன. அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுவது போல,' அவர்கள் அல்லாஹ்வின் ஔியை வாயால் ஊதி அணைக்க முயற்சி செய்கின்றனர். காபிர்கள் அதை விரும்பாத போதிலும் அல்லாஹ் மிகவும் பரிபூரணமான ஔியை உடையவன்.'

    ReplyDelete

Powered by Blogger.