191 பேருடன் மக்காவுக்குச் சென்ற விமானம், இலங்கையில் வீழ்ந்து இன்று 46 வருடங்கள் பூர்த்தி
- சுதத்.எச்.எம்.ஹேவா -
டி.சி. 08 என்ற விமானம் மஸ்கெலியா- ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவடைகிறது.
1974ஆம் ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதியன்று, இந்தோனேசியாவில், மார்டினா டி. சி. விமானம் 08 தனது பணியாளர்கள் மற்றும் யாத்திரிகர்கள் குழுவுடன் மக்காவுக்குச் சென்று கொண்டிருந்த போது ,- லக்ஷபான பிரதேசத்தை அண்டிய ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் விபத்துக்குள்ளான போது, அதன் பணியாளர் குழுவுடன் 191 பேர் விமானத்தில் பயணித்துள்ளடன், விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து இலங்கையில் நடந்த முதலாவதும் மோசமானதுமான விமான விபத்து என்றும் பதிவு செய்யப்பட்டது.
விபத்துக்குள்ளான விமானத்தின் டயர் ஒன்று இன்றும் நோட்டன்பிரிட்ஜ் – விதுலிபுரு பொலிஸ் நிலையம் முன்பாக நினைவுப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment