போதைக்கு அடிமையானவர் மரணம் - அண்மைக்காலத்தில் பதிவான 15 ஆவது சம்பவம்
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அதிகளவான ஹெரோயின் பாவனையே இந்த மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலங்காவில் பிள்ளையார் கோவில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையினால் அண்மைக்காலத்தில் பதிவான 15 ஆவது மரணமாகும்.
Post a Comment