Header Ads



12 ஆம் திகதியிலிருந்து பலாலியில் இருந்து, மீண்டும் விமானங்கள் பறக்க ஆரம்பிக்கும்


கொவிட்-19 தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.


இன்று (05) பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான பலாலி சர்வதேச விமான நிலையமும் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி திறக்கப்பட்டது.


பின்னர், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அதன் செயல்பாடுகளை இடைநிறுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

No comments

Powered by Blogger.